நீ பிரின்ஸா.. மக்கள் கேப்டன் ஸ்ரேயாஸ்.. கல் நெஞ்சக்காரன் ஷஷாங்க் சிங்.. ரசிகர்களின் ஜாலி மீம்ஸ்!
அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் உருவாக்கிய வெறித்தனமான மீம்ஸை பார்க்கலாம்.
மருதமலை படத்தில் அர்ஜுனை பார்த்து வடிவேலு, கல் நெஞ்சக்காரன்.. இவ்வளவு கதறுறானே.. கொஞ்சமாவது கரையிறானா பாரேன் என்று சொல்வார். இதில் அர்ஜுனை ஷஷாங்க் சிங்காகவும், வடிவேலுவை ஸ்ரேயாஸ் ஐயராகவும் மாற்றி, "கல் நெஞ்சக்காரன்.. சதம் அடிக்க சான்ஸ் இருக்கே.. ஒரு பால் ஸ்ட்ரைக் மாத்தி விடுறானானு பாரேன்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா மொமெண்ட்.

அயன் படத்தில் வரும் வில்லன் கமலேஷ், "லட்டுல வச்சேனு நினைச்சியா தாஸ்.. நட்டுல வச்சேன்" என்று ஒரு வசனம் சொல்வார். இதில் வரும் வில்லனாக மேக்ஸ்வெல்லை மாற்றி அவரின் விக்கெட்டை வீழ்த்திய பின், "பேட்டிங்கில் வச்சேனு நினைச்சியா சுப்மன் கில்... பவுலிங்கில் வச்சேன்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் அடேய்.. நீயெல்லாம் பவுலரா மொமெண்ட்.

ஆடுகளம் படத்தில் தனது சேவலிடம் தனுஷ், "தம்பி.. விட்றாதடா.. நீ போய்ருவ.. நான் போய்ருவேன்.. அடுத்த 15 நிமிஷம் இன்னும் 50 வருஷத்துக்கு நிக்கும்" என்று சொல்வார். அதில் வரும் சேவலை சாய் சுதர்சனாகவும், தனுஷை ரசிகர்களாகவும் மாற்றி, "டேய் சுதர்சா.. விட்றாதடா விட்றாத" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் எமோஷனல்.

போக்கிரி படத்தில் விஜய், "இது உங்க இடம்.. உங்க ஆளுங்க.. நீ நினைச்சா என்ன வேண்டுமானாலும் பண்ணாலும்.. எனக்கு உன்னை பார்த்து பயம் இல்லை.. அதுக்கு இதான் சாம்பிள்" என்று சொல்வார். இதில் வரும் விஜய்-ஐ ஸ்ரேயாஸ் ஐயராக மாற்றி, "இது உங்க கிரவுண்ட்.. உங்க பவுலிங் யூனிட்.. அதை பார்த்து பயம் கிடையாது.. அதுக்கு இதான் சாம்பிள்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ் ரகம்.

வின்னர் படத்தில் கட்டதுரையை சந்திக்க வடிவேலு செல்லும் போது, இளநீரை கொண்டு எறிவார்கள். இதில் கட்டதுரையாக ஸ்ரேயாஸ் ஐயரையும், வடிவேலுவாக கொல்கத்தா அணியையும் மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் வேண்டாம்.. வலிக்கிது.. அழுதுறுவேன் ரகம்.













Click it and Unblock the Notifications