ஆண் மயில் செக்ஸ் வச்சிக்காதா.. அறிவியல் வாத்தியார் உயிரோட இருக்காரா? நெட்டிசன்கள் 'பொளேர்'
ஆண் மயில் பெண் மயிலுடன் உறவு கொள்ளாது என்பதால் அது புனிதமானது என்று ராஜஸ்தான் நீதிபதி கூறினார். இப்படி சொன்ன நீதிபதியை சும்மா விடுவார்களா நெட்டிசன்கள்.. சமூகவலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
சென்னை: ஆண் மயில் பெண் மயிலுடன் உறவு கொள்ளாது. அதனால்தான் அது தேசிய பறவையாக உள்ளது என்று சொல்லி ராஜஸ்தான் நீதிபதி நெட்சன்களிடம் மாட்டிக் கொண்டார்.
ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா, "ஆண் மயில் பிரம்மச்சர்யத்தை பின்பற்றும் பறவை. அது ஒருபோதும் பெண் மயிலுடன் உறவு கொள்வதில்லை. ஆண் மயிலின் கண்ணீரைப் பருகியே பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது என்று அறிவியலுக்கு சற்றும் பொருத்தமில்லாத ஒன்றை உளறிக் கொட்டினார்.
இதற்கு நம்ம நெட்டிசன்கள் நீதிபதியை சமூக வலைத்தளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர். அவற்றில் சில உங்களுக்காக..

சட்டபுத்தகத்திற்கு பதிலாக..
"ஆண் மயில் பிரம்மச்சாரி அதன் கண்ணீர் துளிகளால் தான் பெண் மயில் கர்ப்பமாகிறது - நீதிபதி
ஐ திங் இவர் சட்டப்புத்தகத்துக்கு பதிலா செக்ஸ் புத்தகம் படிச்சுட்டார்னு நினைக்கிறேன்" என்று ஆசிக் இலாஹி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கிளிகளின் புலம்பல்
"மயில் காட்டுல குஜாலாதான் இருக்கு! உண்மையில கிளிங்க நாங்கதான்டா பிரம்மச்சாரி! கிளிஜோசியம்னு ஒண்டியா அடைச்சி வைச்சிடுறாங்க" என்று குட்டி கிரி பதிவிட்டுள்ளார்.

புக்குல வச்சா குட்டி போடுதே.. அப்படியா..
"மயில் கண்ணீரால குட்டி போடும்னு சொல்றப்போ நோட்புக்குக்கு உள்ள வச்சா குட்டி போடும்னு நாம நெனச்சது ஒன்னும் தப்பில்லையே" என்று அஸ்வின் அசி நக்கலடித்துள்ளார்.

அறிவியல் வாத்தியார் உயிரோட இருக்காரா?
"மயில் உறவு கொள்ளாது. ஆண் மயிலின் கண்ணீரைக் குடிப்பதன் மூலம்தான் பெண் மயில் கருத்தரிக்கிறது. அதனால்தான் மயில் தேசியப் பறவையாக உள்ளது. - ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர ஷர்மாவுக்கு அறிவியல் பாடம் எடுத்த வாத்தியார் இன்னமும் உயிரோட இருக்காரா தல?" என்று கேட்டுள்ளார் லெமூரியன் வாய்ஸ்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications