For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

30 கரும்பு வாங்குறோம்.. சந்தையில விக்குறோம்.. 3ஜிபிய நாம யூஸ் பண்றோம்.. டீல் ஓகேவா?

கரும்புக்கு இலவசமாக டேட்டா தருவது பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.

Google Oneindia Tamil News

சென்னை: கரும்புக்கு இலவசமாக டேட்டா தருவதாக மானாமதுரையில் கரும்பு வியாபாரிகள் அறிவித்திருப்பதை வைத்து பல ஜாலி மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இலவசம் வாங்கி, வாங்கியே பழகி விட்டார்கள் நம் மக்கள். இதனாலேயே இலவசமாக ஏதாவது கொடுத்து மக்களை தங்கள் பொருட்களை வாங்க வைக்கும் முயற்சியில் வியாபாரிகளும் சுலபமாக வெற்றி பெற்று விடுகிறார்கள். பெரிய நிறுவனங்கள் என்றில்லை, சின்னச் சின்னக் கடைகளும்கூட இப்போதெல்லாம் இந்த வெற்றிச் சூத்திரத்தை கையில் எடுக்கத் தொடங்கி விட்டன.

Pongal memes: Funny memes collection on sugarcane

சமீபகாலமாக பிரியாணி கடைகள்தான் இப்படிப்பட்ட இலவச ஆஃபர்களை அள்ளி வழங்கி வந்தனர். தற்போது கரும்பு வியாபாரிகளும் அதில் சேர்ந்து விட்டனர். மானாமதுரையில் கரும்பு வாங்கினால் இலவச டேட்டா என சிலர் அறிவித்திருப்பதுதான் இப்போது டாக் ஆப்தி டவுணே.

Pongal memes: Funny memes collection on sugarcane

எப்படியும் நாளைக்கு பொங்கலுக்காக கரும்பு வாங்கியே ஆக வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதால் எல்லா வீடுகளிலும் டேட்டாவின் தேவையும் அதிகமாக உள்ளது. இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் என இந்த கரும்புக்கு டேட்டா இலவசம் என்ற அறிவிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Pongal memes: Funny memes collection on sugarcane

படப்பை குணாவிற்கு உதவியதாக 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்.. டிஜிபி அதிரடி உத்தரவு! படப்பை குணாவிற்கு உதவியதாக 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்.. டிஜிபி அதிரடி உத்தரவு!

இது தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக, விடுவார்களா நம் மீமர்கள். இதையே பொங்கலுக்கான கான்செப்ட்களில் ஒன்றாக்கி மீம்ஸ் மழை பொழியத் தொடங்கி விட்டனர்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலியான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

English summary
These are some jolly memes collection on Pongal and sugarcane.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X