பாடம் நடத்துறது பி.டி. பீரியட்ல.. இதுல அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படக் கூடாதுனு அட்வைஸு வேற!
சென்னை : மழை விடுமுறை கிடைக்கவில்லையே என ஏக்கத்தில் இருக்கும் மாணவர்களின் வெந்த புண்ணில் வேளைப் பாய்ச்சுவதுபோல், பள்ளிக்கூட மீம்ஸ்களைப் பகிர்ந்து கலாய்ச்சிபை செய்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
காலாண்டு, அரையாண்டு விடுமுறை போக, நவம்பர், டிசம்பர் மாதங்கள் வந்தாலே கூடுதலாக மழை விடுமுறை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நம் மாணவர்கள் மத்தியில் இருக்கும். அதுவும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாணவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆனால் இந்தமுறை அவர்களது ஆசையில் மழைக்குப் பதில், பனியைத் தூவி விட்டது வானிலை.
அதனால் எப்போது இங்கு மழை பெய்யும் என ஆர்வமாக அவர்கள் ஒருபுறம் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்க, இந்தக் குறும்புக்கார நெட்டிசன்கள் தங்கள் பங்கிற்கு அவர்களது பொறுமையை மேலும் சோதிக்கும் அளவிற்கு, பள்ளிக்கூட நினைவுகளை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
"பாடம் நடத்துறது பி.டி. பீரியட்ல.. இதுல அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாதுனு அட்வைஸு வேற!" என்பது மாதிரியான மீம்ஸ்கள் நினைத்து நினைத்து சிரிக்க வைக்கின்றன. அதேமாதிரி, 'நீங்களாம் வாத்தியார மிரட்டுனா தான்டா ரவுடி.. நாங்களாம் அப்போ பாக்கெட்ல சீப்பு வச்சிருந்தாலே ரவுடிதான்' என சைடுகேப்பில் தங்களது அந்தநாள் ஞாபகங்களையும் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் 90ஸ் கிட்ஸ்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட பள்ளிக்கூட மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications