ஏன்டா இப்டி இடையில சிந்து பாடி அவமானப்படுத்திட்டியே.. இனி யாருடா என்னை மதிப்பாங்க!
சென்னை : மற்ற மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பகலில் வெயிலும், இரவில் மழையும் என மாறி மாறி இருப்பது மக்களை எந்தளவுக்கு சந்தோசப்படுத்தி இருக்கிறது என்பது அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலேத் தெரிகிறது.
இந்தாண்டு பிப்ரவரி கடைசியிலேயே வெயில் வாட்டத் தொடங்கிவிட, இப்போதே இப்படி என்றால் ஏப்ரல், மே மாதங்களில் எல்லாம் என்னதான் செய்யப் போகிறோமோ என அப்போதே கவலைப்பட ஆரம்பித்து விட்டனர் நம் மக்கள். அதுவும் குறிப்பாக அக்னி நட்சத்திரம்தான் அவர்களது பெரிய பயமாகவே இருந்தது. மக்களின் அந்த பயத்தை மேலும் அதிகரிப்பதுபோல், அவ்வப்போது கோடைமழை பெய்தாலும், வெயில் தன் பங்கிற்கு கொளுத்தி எடுத்தது.
ஆனால் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அக்னி நட்சத்திரம் முடிய இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில், சென்னையில் கடந்த சில தினங்களாக இரவில் காற்றுடன் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பகலில் வெயில் கொளுத்தினாலும், இரவில் மழை வந்து, அதனை சமன் செய்து விடும் என மக்கள் அதனைக் கண்டு கொள்வதில்லை.
ஆனால், மற்ற மாவட்டங்களில் வழக்கம் போல் வெயில் கொளுத்தி வருவதால், அம்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வெயில் பற்றிய மீம்ஸ்களையும், மழை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மழை மீம்ஸ்களையும் பகிர்ந்து, இணையத்தையும் சமன் செய்து வருகின்றனர். "ஏன்டா இப்டி இடையில சிந்து பாடி என்னை அவமானப்படுத்திட்டியே.. இனி யாருடா என்னை மதிப்பாங்க!" என அக்னி நட்சத்திரமே புலம்புவது போல் உள்ள மீம்ஸ்கள் எல்லாம் வேற லெவல் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications