"ஒரேயொரு ரன் அவுட்.. ஆர்சிபி அணியவே முடிச்சுவிட்டியே அண்ணே" விராட் கோலியை வம்பிழுக்கும் மீம்ஸ்!
பெங்களூர்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. சொந்த மண்ணில் இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தோல்வியை சந்தித்துள்ள நிலையில், போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
ரெண்டு படத்தில் தேவையின்றி ஒருவரின் தலையில் தாம்பூலத்தால் அடித்து ரத்தம் வர வைத்துவிட்டு வடிவேலு பீதியில் நின்று கொண்டிருப்பார். அப்போது வரும் ஒருவர், "அண்ணே.. கையை கொடுங்கணே.. ஒரு மாமிச மலையையே சாச்சுட்டியேணே" என்று கோர்த்துவிடுவார். அதில் வரும் வடிவேலுவாக விராட் கோலியையும், இன்னொரு நபராக டெல்லி அணியையும் மாற்றி, "அண்ணே.. கையை கொடுணே.. ஒரு ரன் அவுட் மூலமா ஒரு அணியையே சாச்சுட்டியேணே" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஐயோ மாட்டிக்கிட்டோமே மொமண்ட்.

குட் பேட் அக்லி படத்தில் வரும் வில்லன் அர்ஜூன் தாஸ், "இது என்னோட இடம்டா" என்று மிரட்டலாக அஜித் குமாரிடம் சொல்லுவார். அதில் வரும் அர்ஜூன் தாஸை அப்படியே கேஎல் ராகுலாக மாற்றி, "சின்னச்சாமி மைதானம் என்னோட சொந்த மைதானம்டா" என்று பேட்டை வைத்து அடித்து சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பாகுபலி மொமண்ட்.

சிங்கம் படத்தில் வரும் விஜயகுமார், நீ சொந்தக்காரனு சொன்ன ஆளுக்கு டிஎஸ்பி-யா புரமோஷன் கொடுத்துருக்கேன்.. ஆமா, அவன் உனக்கு என்ன முறை வேணும் என்று கேட்பார். அதற்கு பிரகாஷ்ராஜ், "பங்காளி முறை வேணுங்கயா" என்று பதில் அளிப்பார். அதனை அப்படியே விஜயகுமாரை ஆர்சிபி அணியாகவும், பிரகாஷ்ராஜை மும்பை அணியாகவும் மாற்றி, நீ கொடுத்த ஆளு அருமையாக ஆடுறான்யா.. என்ன முறை வேணும்.. என்று கேட்பதாகவும், அதற்கு மும்பை ரசிகர்கள், "சித்தப்பா முறை வேணுங்கயா" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஐயோ எரியுது மாலா மொமண்ட்.

எம்-மகன் படத்தில் வடிவேலு, "மற்ற நேரமெல்லாம் மாப்பிள்ளையா இருக்கான்.. சாப்பிடும் போது மட்டும் எம்-டனா மாறிடுறான்யா" என்று புலம்புவார். இதில் வரும் வடிவேலுவை ஆர்சிபி ரசிகர்களாக மாற்றி, "மற்ற இடத்துல எல்லாம் ஈஸியா ஜெயிச்சிடுறாங்க.. சொந்த கிரவுண்ட்னு வந்துட்டா மண்ணை கவ்விடுறானுங்களே" சொல்வதாக என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஐயோ முடியல ரகம்.

வடசென்னை படத்தில் செந்திலை கொலை செய்வதற்காக ஆலோசனையின் போது ஒருவர், "எனக்கு என்னமோ இன்னிக்கு செந்திலை போட்டுருவோம்னு தோணுது" என்று சொல்வார்.. அதனை அப்படியே மாற்றி, "எனக்கென்னமோ சின்னச்சாமி ஸ்டேடிய்ம ஆர்சிபி ரசிகர்களே தீயை வைத்து கொளுத்திடுவாங்கனு தோணுது" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோதனை மேல் சோதனை மொமண்ட்.

-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications