"1 பாலுக்கு 13 ரன் தேவை.. நோ-பால் சத்தம் வருமோனு ஒருத்தன் பீதில இருந்தான்" தெறிக்கும் ஆர்சிபி மீம்ஸ்
அகமதாபாத்: 18 ஆண்டுகளில் ஐபிஎல் தொடரை முதல்முறையாக வென்று ஆர்சிபி அணி புதிய சரித்திரம் படைத்துள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வென்ற நிலையில், இந்த ஆட்டத்தில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
ஜெர்ஸி படத்தில் கிரிக்கெட்டுக்கு முதிர்ந்த வயதில் கம்பேக் கொடுக்கும் நாயகனான அதனை யாருடன் பகிர்வது என்று தெரியாமல் ரயில்வே ஸ்டேஷனில் சென்று கத்தி, "ஜெய்ச்சிட்டோம்" என்று கத்தி கொண்டாடுவார். இந்த காட்சியுடன் விராட் கோலி கோப்பையை வென்ற பின் கத்தி கொண்டாடும் காட்சியை ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் நீ ஜெய்ச்சிட்ட மாறா ரகம்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பார்த்திபன் "தூதுவன் வருவான்.. மாரி பொழியும்" என்று சொல்வார்.. இறுதியாக அந்த தூதுவனாக கார்த்தி நிற்கும் போது, அவர் கையெடுத்து கும்பிடுவார்.. அதனை அப்படியே மாற்றி விராட் கோலியாக பார்த்திபனையும், ரஜத் பட்டிதாராக கார்த்தியையும் மாற்றி, "தூதுவன் வந்துவிட்டான்.. மழை பொழிந்துவிட்டது" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆயிரத்தில் ஒருவனடா நீ ரகம்.

அண்மையில் சிஎஸ்கே ரசிகர் ஒருவர் பேசிய வீடியோவில், டேய்.. இவன் சாதாரண ஆள் இல்லடா டோய்.. ஆஸ்திரேலியா காரன் பயந்தான்.. தென்னாப்பிரிக்காக்காரன் பயந்தான் என்று சொல்வார். அதனை அப்படியே மாற்றி, "ஒரு பாலுக்கு 13 ரன்னு.. அப்பவும் பக்கத்துல இருந்த சாலா ஒருத்தன் எங்க நோ-பால் சத்தம் வந்துருமோனு பயந்துட்டு இருந்தான்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆர்சிபி ரசிகர்களின் பீதி ரகம்.

தூள் படத்தில் விவேக் கஷ்டப்பட்டு ரீமா சென் முன் உடற்பயிற்சி செய்வது போல் நடித்து கொண்டிருப்பார். அதனை பார்த்து ரீமா சென் வியந்த நேரத்தில், திடீரென உள்ளே புகும் பறவை முனியம்மா, இந்த கருமத்தைதான் ராத்திரி பூராம் ஒட்டிட்டு இருந்தியா என்று ஒரு உதையில் பறக்கவிடுவார்.. அதில் வரும் விவேக்காக ஆர்சிபி கேப்டன்களையும், பறவை முனியம்மாவாக ரஜத் பட்டிதாரையும் மாற்றி, "இந்த கருமத்தைதான் 17 சீசன்களாக உருட்டிட்டு இருந்தீங்களா" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு ரகம்.

வெண்ணிலா கபடிக் குழு படத்தில் முதல்முறையாக போட்டியில் வெல்லும் சூரி, அப்புக்குட்டி இருவரும், "மாப்பிள்ள.. நமக்காக இத்தனை பேரு கைத் தட்டுறாங்கடா" என்பார்.. அதற்கு சூரி, "உனக்கும் ஃபர்ஸ்ட் டைமா.. எனக்கும் ஃபர்ஸ்ட் டைம்.. வா ஓரமா போய் ஃபீல் பண்ணலாம்" என்பார். அதில் வரும் சூரியாக ஆர்சிபி அணியையும், அப்புக்குட்டியாக ஆர்சிபி ரசிகர்களையும் மாற்றி, "புதுசுல்ல.. கொஞ்சம் ஓவராத்தான் ஃபீல் பண்ணுவாங்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் கொஞ்சம் ஓவராதான் போறாங்க ரகம்.

-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
76 பந்துகளுக்கு பின் முதல் சிக்ஸ்.. சூர்யவன்ஷி கிட்ட சொல்லிடாதீங்க.. குஜராத்தை வெளுக்கும் ரசிகர்கள்! -
இதுக்கு பேருதான் ஆதிக்கம்.. ஆர்சிபிக்கு எதிராக 3வது முறை.. பவர்பிளேயிலேயே சுருண்ட கில் - சுதர்சன்! -
குஜராத் அணி கதை ஓவர்.. ஹேசல்வுட்டிடம் 3வது முறையாக வீழ்ந்த சுப்மன் கில்.. சைலண்ட்டான அகமதாபாத்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
'பிரின்ஸ்'னு சொல்லிக்கிட்டா பத்தாது.. விராட் கோலி மாதிரி விளையாடவும் செய்யணும்.. 25 பந்தில் அரைசதம்! -
சுப்மன் கில் அவுட்.. வெறித்தனமாக கத்தி கொண்டாடியா விராட் கோலி! அனுஷ்கா சர்மா பக்கம் திரும்பிய கேமரா! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications