தப்பா கனவு கண்டு இந்த வேலைக்கு வந்துட்டோம் போல.. கலெக்டரே பகிர்ந்த கலக்கலான மழை லீவு மீம்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை வந்தாலே போதும் சின்ராசை கையில பிடிக்க முடியாது என்பதுபோல் மாவட்ட கலெக்டர்களின் பின்னால் சுற்றுவார்கள் மாணவர்கள்... காரணம் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பார்களா என்று ஏக்கத்தில் தான்.. இந்நிலையில் கலெக்டர் ஒருவரே மழைக்கான மீம்ஸ் போட்டு அதிர வைத்துள்ளார். நீங்களே பாருங்கள்.

தமிழகம் முழுவதுமே மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் போது மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளிப்பது வழக்கமாக உள்ளது.

 school rain leave memes share by tamilandu IAS alex paul menon ias

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்த பகுதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு காரணமாக ஒருவாரம் விடுமுறைவிடப்பட்டது. அதேபோல் தான் தூத்துக்குடி, நெல்லை பகுதிகளில் வெள்ள பாதிப்புசரியாகும் வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மழை பெய்தாலே விடுமுறை விடுவார்கள் என்ற தவறான எண்ணமும் மாணவர்கள் மத்தியில் இருக்கிறது. எங்கள் ஊரில் மழை பெய்கிறது. தயவு செய்து விடுமுறை விடுங்கள் என்று கடந்த மாதம் மாணவர்கள் சிலர் கெஞ்சியபடி கோரிக்கை வைத்த சம்பவங்கள் நடந்தது. மழை வந்தாலேபோதும் சின்ராசை கையில பிடிக்க முடியாது என்பதுபோல் மாவட்ட கலெக்டர்களின் பின்னால் மாணவர்கள் சுற்றுகிறார்கள். கலெக்டர் மனது வைத்து விடுமுறை அறிவிப்பார் என்று பல மாணவர்கள் டிவி சேனல்களை ஆன் செய்தும் பார்ப்பார்கள். ஆனால் கலெக்டர்கள் அவ்வளவு எளிதில் விடுமுறை அறிவிக்கவும் மாட்டார்கள்.

சில நேரங்களில் பக்கத்து மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அறிவிப்பார்கள். அவர்கள் மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அறிவிக்க மாட்டார்கள். உதாரணத்திற்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் கடந்த மாதம் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கவில்லை.. மாறாக காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அறிவித்திருந்தார்கள். அப்போது மாணவர்கள் பலர் நொந்து போய் மீம்ஸ் எல்லாம் வெளியிட்டார்கள்.

இந்நிலையில் மழை குறித்து மாவட்ட கலெக்டர் ஒருவரே கலக்கலான மீம்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். எந்த மாவட்ட கலெக்டர் என்றால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தான். ஆனால சத்தீஸ்கரில் பணியாற்றுகிறார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கலெக்டரான அலெக்ஸ் பால்மேனன். இவர் வெளியிட்டுள்ள மீம்ஸ் இப்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

அந்த மீம்ஸில், குழந்தை பேசுவது போல் உள்ளது. படிச்சு என்ன ஆகப்போற? கலெக்டர் ஆகப் போகிறேன்.. கலெக்டர் ஆகி என்ன செய்வாய்? கலெக்டராகி பள்ளிகளுக்கு லீவு விடுவேன் என்று உள்ளது. அதை பகிர்ந்து அலெக்ஸ் பால்மேனன் ஐஏஏஸ், இப்படித் தான்யா நாமளும் தப்பா கனவு கண்டு இந்த வேலைக்கு வந்துட்டோம் போல என்று கிண்டலா ட்விட் போட்டிருக்கிறார். அதை பலரும் ரசிக்கிறார்கள்.

எப்படி விடப்படுகிறதுது: லேசான மற்றும் மிதமான மழைபெய்தாலே பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று மாணவர்கள் தவறாக நினைக்கிறார்கள். மழைகாலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு 7 கட்டுப்பாடுகள் பள்ளி கல்வித்துறை விதித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு முதலே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளின் படியும். மழையின் தீவிரத்தை பொறுத்துமே மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கிறார்கள். அந்த ஏழு கட்டுப்பாடுகளை பற்றி இப்போது பார்ப்போம்.

1. தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றாலோ, போக்குவரத்து பாதிக்கப்பட்டோலோ மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். மிதமான மழைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கூடாது.

2. மழை நிலவரத்தை ஆராய்ந்து 3 மணி நேரத்திற்கு முன்பாகவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

3. முதன்மை கல்வி அலுவலர்கள் மழையின் தீவிரத்தை ஆராய்ந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

4. மழையின் தீவிரத்தை உணர்ந்து அதிகம் பாதிக்க கூடிய குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்க வேண்டும். மாவட்டம் முழுவதற்கும் விடுமுறை அளிப்பதை தவிர்க்க வேண்டும்.

5. கோயில் திருவிழாக்களின் போது அளிக்கப்படும் விடுமுறையை வேறொரு நாளில் பள்ளி வைத்து ஈடு செய்ய வேண்டும்.

6. மழை காரணமாக அளிக்கப்படும் விடுமுறைகளை சனிக்கிழமைகளில் பள்ளி வைத்து ஈடு செய்ய வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் கற்க முடியும்.

7. மழையால் பாதிக்கப்பட்டு பள்ளிகளில் மழைநீர் தேங்கியிருந்தால், உடனடியாக மழைநீர் வெளியேற்றப்பட்டு போதுமான வசதிகள் செய்து தரப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+