2023 உலகக்கோப்பை போஸ்.. அங்க ஆரம்பிச்சது சார் பிரச்சனை.. ஆஸ்திரேலியா அணியை அலறவிடும் மீம்ஸ்!
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. இதனால் டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் ஆஸ்திரேலியா அணி வெளியேறும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனை வைத்து சோசியல் மீடியாவில் ஆஸ்திரேலியா அணியை கிண்டல் செய்து உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸை பார்க்கலாம்.
சார்பட்டா பரம்பரை படத்தில் யாரும் எதிர்பார்க்காத போது கபிலன் ஆர்யா ராமனை வீழ்த்திவிடுவார்.. அப்போது "ரங்கன் வாத்தியார் சிஷ்யன்டா" என்று ஆக்ரோஷமாக கூறுவார்.. அப்படி ராமனாக ஆஸ்திரேலியா அணியையும், ஆர்யாவாக இலங்கை அணியையும் மாற்றி, ரங்கன் வாத்தியார் சிஷ்யன்டா என்று பதும் நிசாங்கா சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலி முடிஞ்ச் மொமண்ட்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் பகவதி பெருமாள் ஒரு விக்கெட்டை எடுத்துவிட்டு, டேய்.. தம்பி.. டேய் தம்பி.. என்று பீப்பி ஊதி எதிரணியை கடுப்பேற்றுவார்.. அதில் வரும் பகவதி பெருமாளாக இலங்கை அணியையும், எதிரணியாக ஆஸ்திரேலியா அணியையும் மாற்றி, டேய் தம்பி.. என்று வம்புக்கு இழுப்பதாக உருவாக்கப்பட்டுள்ள வாங்கடா வந்து பாருங்கடா மொமண்ட்.

ஏ1 படத்தில் நாயகியின் தந்தை உயிரிழந்த பின், அங்கு செல்லும் ஒருவர்.. "அத்திம்பேர்.. கொசுக்கடி இல்லாம நல்லா தூங்கங்கோ" என்பார். அதில் வரும் டெட் பாடியாக ஆஸ்திரேலியா அணியையும், நாயகியாக இலங்கை அணியையும், நாயகியின் நண்பராக ஜிம்பாப்வே அணியையும், இன்னொரு நபராக இந்திய அணியையும் மாற்றி, நீங்க நல்லா கொசுக்கடி இல்லாம தூங்குங்க அத்திம்பேர் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள குபீர் ரகம்.

ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ், "சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா" என்று சொல்வார். அதில் வரும் தனுஷாக பதும் நிசாங்காவை மாற்றி, 52 பந்துகளில் சதமடித்த பின், "இலங்கை அணியின் பரம்பரரையில் மீண்டும் ஒரு மாஸ் ஓப்பனர்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பக்கா மாஸ் ரகம்.

குஸ்தி படத்தில் அரிசி படைக்கு வடிவேலு தீ வைத்த பின், அந்த அரிசிக் கடைக்காரரான தியாகு, "நல்லா தான் சார் போயிட்டு இருந்துச்சு.. திடீர்னு சாம்பிராணி போடுறேன்னு ஒருத்தன் வந்தான்.. அங்க ஆரம்பிச்சது சார் சனி" என்றார். அதில் வரும் தியாகுவாக ஆஸ்திரேலியா அணியை மாற்றி, "நல்லா தான் கப் அடிச்சிட்டு இருந்தோம்.. 2023 உலகக்கோப்பை மேல கால்ல போட்டு ஒருத்தன் போஸ் கொடுத்தான்.. அங்க ஆரம்பிச்சது தான் சனி" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சொந்த காலில் சூனியம் வைத்த மொமண்ட்.













Click it and Unblock the Notifications