இப்ப தானே பார்த்தேன்.. அதுக்குள்ள வெயிட்டிங் லிஸ்டா.. தரமான தட்கல் டிக்கெட் புக்கிங் மீம்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்வது என்பது பலருக்கும் கனவு போல் மாறிவிட்டது. அவ்வளவு எளிதில் யாராலும் புக்கிங் செய்ய முடியாது. மிக நுணுக்கமான தட்கல் புக்கிங்கில் சில வினாடிகள் கூட தலையெழுத்தையே மாற்றிவிடும். இது தொடர்பான வடிவேலு மீம்ஸ் ஒன்று வெளியாகிறது. அந்த மீம்ஸ் வீடியோ பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் விரும்பும் பயணம் என்றால் அது ரயில் பயணம் தான். குறைவான விலையில் டிக்கெட் இருப்பதால் பலரும் விரும்புகிறார்கள். இரண்டாவது நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணம் தான் உகந்தது. ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் எடுக்க வேண்டும் என்றால் 3 மாதத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அப்படி முன்பதிவு செய்ய முடியவில்லை என்றால், தட்கலில் புக்கிங் செய்ய வேண்டும்.

Tatkal train ticket booking vadivelu memes latest in tamil

தட்கலில் புக்கிங் செய்ய விரும்புவோர் காலை 11 மணிக்கு முன்பதிவு செய்ய வேண்டும். 11 மணி முதல் 11.05க்குள் வெயிட்டிங் லிஸ்ட் வந்துவிடும். அதன்பிறகு புக்கிங் செய்யவே முடியாது. அப்படி புக்கிங் செய்தாலும் டிக்கெட் கிடைப்பதற்கு வாய்பே இல்லை.. இதை கிண்டலாக சித்தரித்து வடிவேலு மீம்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அந்த வீடியோவில் வடிவேலு கோவிலுக்கு வெளியே செருப்பை வைத்துவிட்டு சாமி கும்பிட போவார்.

அதாவது தட்கல் டிக்கெட் புக்கிங் பண்ண பிராசஸிங் நோக்கி போகிறார். அப்போது திரும்ப திரும்ப பார்க்கிறார். தட்கல் காலை 10 மணி என்பதால் ஓபன் ஆகவில்லை.. சரியாக 11 மணி ஆகிறது. திரும்பவும் பார்க்கிறார். செருப்பு அங்கு இருக்கிறது. சாமி கும்பிடுகிறார்.. அதாவது தட்கலில் பிராசஸ் செய்ய கண்ணை மூடி திறக்கிறார். திரும்பி பார்த்தால் 49 வெயிட்டிங் லிஸ்ட் இருக்கிறது. அதாவது செருப்பு மாயமாகிறது. இதை பார்த்து அதிர்ந்து போன வடிவேலு, இப்ப தானே பார்த்தேன்.. அதற்குள் இப்படி ஆகிடுச்சே என்று ரியாக்சன் தருகிறார்.. இதுதான் தட்கல் புக்கிங்கில் தினமும் நடக்கிறது.

சரி தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி?: தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டும் என்றால், அதிவேக இணைதள இணைப்புடன் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்பில் முயற்சி செய்யுங்கள். மொபைலில் புக்கிங் செய்வதை விரும்பாதீர்கள். தட்கலில் டிக்கெட் டிக்கெட் முன்பதிவு செய்யும் முன்பு இரண்டு விஷயங்களை சரியாக செய்துவிடுங்கள். அது என்ன வென்றால், யார் யார் பயணிக்க போகிறீர்களோ, அவர்களின் பெயரை காலை 9 மணிக்கே உடன் ஐஆர்சிடிசி இணையதளத்தில் லாக் இன் செய்து add master list இல் சேர்த்து விடுங்கள். மாஸ்டர் லிஸ்டை பொறுத்தவரை அனைவரது ஆதார் எண்ணும் வேண்டும். ஆதார் எண்ணை வைத்து சேமியுங்கள். அப்படி அவர்களின் பெயர்களை சேர்க்கும் போது ஒருவருக்குமேல் லோயர் பர்த் போடாதீர்கள். இதை எல்லாம் சரியாக செய்து வைத்துக் கொண்டால், தட்கல் நேரத்தில் சிக்கல் வராது.

Tatkal train ticket booking vadivelu memes latest in tamil

அதேபோல் ஐஆர்சிடிசி வாலட் பேமெண்ட் மோடில் டிக்கெட்டுக்கான பணத்தை போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதுதான் சிக்கல் இல்லாமல் பேமெண்ட் போக ஒத்துழைக்கும். மற்ற பேமெண்ட் மோடுகள் சட்டென சிக்கலை உருவாக்கும்.. எனவே டிக்கெட் கட்டணத்த ஐஆர்சிடிசியின் பிரத்யேக வாலட் பேமெண்ட் மோடில் காலையிலேயே போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

தட்கல் முன்பதிவு ஏசி பெட்டிகளுக்கு 10 மணிக்கே ஓபன் ஆகிவிடும். ஏசிபெட்டிகளில் பயணிக்க 10மணிக்கும், ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிக்க 11மணிக்கும் முன்பதிவு செய்ய வேண்டும்.11 மணிக்கு ஓபன் செய்ய போகிறீர்கள் என்றால். 10 58க்கு லாக் இன் செய்து உள்ளே சென்றுவிடுங்கள். உள்ளே போய் எந்த பதற்றமோ, தவறுகளோ இல்லாமல் சரியாக மேற்கொள்ள வேண்டும். நீங்கள் செல்ல வேண்டிய ஊர், கிளம்பும் ஊரை சரியாக கிளிக் செய்து, நாள் நேரத்தை கிளிக் செய்து. எந்த ரயிலோ அதற்கு பக்கத்தில் 11 மணிக்குள் போக வேண்டும்.

சரியாக 11 மணி ஆன உடன் கிளிக் செய் உள்ளே செல்லுங்கள். போன உடன், ஏற்கனவே நீங்கள் கிரியேட் செய்த மாஸ்டர் லிஸ்டில் உள்ள பெயர்கள் அப்படிய வந்துவிடும்.நீங்கள் ஒருலெட்டரைஅடித்தாலே அவர் பெயரை காட்டும். அப்படியே செலக்ட் செய்தால் வயது பர்த் என எல்லாமே வரும்.. இப்படியே குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர் இருந்தால் அவர்களின் பெயரை அடித்து செலக்ட் செய்து வைத்துவிடுங்கள்.

Tatkal train ticket booking vadivelu memes latest in tamil

அதன்பிறகு புக்கிங் கன்பார்ம் என்றால் மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்யட்டும் என்றமோடை கிளிக் செய்து கீழே வந்தால் கேப்சியா கேட்கும். அதனை பதற்றம் இல்லாமல் அடித்தால், உள்ளே பேமெண்ட் மோடுக்கு போகும். பேமெண்ட் மோடில் ஐஆர்சிடிசி வாலட் ஆப்சனை செலெக்ட் செய்தால் சட்டென் உள்ளே போய் எந்த சிக்கலும் இல்லாமல் பேமெண்ட் கிளிக் ஆகிவிடும். எளிதாக முன்பதிவு செய்யலாம்.

ஐஆர்சிடிசி வாலட்டிற்கு அடுத்தபடியாக பேடிஎம் பயன்படுத்தலாம்.. பேமெண்ட் எரர் இல்லை என்றால் எளிதாக பேடிஎம் இல் உள்ள போய் ஸ்கேன் பே ஆப்சனை செலெக்ட் செய்து மொபைலைவைத்து ஸ்கேன் செய்தால் டிக்கெட் புக் ஆகிவிடும். ஆனால் பொங்கல் சமயத்தில் நடந்தது என்னவென்றால் எந்த பேமெண்ட் மோடும் ஓர்க் ஆகவில்லை. மொத்தமாக ஐஆர்சிடிசி தளமே முடங்கவிட்டது.

அதேநேரம் ஐஆர்சிடிசி வாலட்டில் முயற்சித்தவர்களுக்கு டிக்கெட் புக்கிங் செய்ய வாய்ப்பு இருந்தது. அதுவும் சில நிமிடங்களே நடந்தது. மற்றபடிமொத்தமாக ஹேங் ஆகி 15 நிமிடம் சைட்டே தொங்கிவிட்டது. தட்கல் முன்பதிவின் போது பதற்றத்தில் மாற்றி மாற்றி கிளிக் செய்துவிடாதீர்கள் .. அப்படி ஒருமுறை தவறு செய்தால் கூட புக்கிங் பண்ண முடியாமல் போக வாய்ப்பு உள்ளது. சிறு தவறு கூட செய்யாமல் சரியான முறையில் முயற்சித்தால், எரர் எதுவும் டெக்னிக்கலாக தோன்றாத பட்சத்தில், புக்கிங் ஆக 50 சதவீதம் வாய்ப்பு உள்ளது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+