இது படம் இல்ல.. "மாரியோ" வீடியோ கேம்! வசமாக சிக்கிய "தெலுங்கு" பேன்ஸ்.. டிரெண்டிங் ஆதி புருஷ் மீம்ஸ்
சென்னை: பிரபாஸ் நடிப்பில் வெளியாக இருக்கும் ஆதி புருஷ் படத்தின் டீசர் வெளியான நிலையில் அதை வைத்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் 1 படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. படத்தின் வசூல் 220 கோடி ரூபாயை தாண்டி உள்ளது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்கு இடையே தற்போது ஆதி புருஷ் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. ராமாயணம் கதையை பிரபாஸை வைத்து எடுத்துள்ளனர். இதில் சயீப் அலிகான் வில்லனாக ராவணன் நடித்துள்ளார்.

ராவணன்
தெலுங்கு சினிமா ரசிகர்கள் கடந்த சில நாட்களாகவே பொன்னியின் செல்வன் படத்தை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். பாகுபலி படத்தை விட நல்ல கதை, நேர்த்தியான படப்பிடிப்பு இருந்தும் கூட பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தை வேண்டும் என்றே தெலுங்கு சினிமா ரசிகர்கள் பலர் கடுமையாக தாக்கி வருகின்றனர். முக்கியமாக பாகுபலி வசூல் அளவிற்கு வந்துவிடாது என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

தெலுங்கு சினிமா
இதைத்தான் தற்போது தமிழ் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். தமிழ் சினிமாவை கிண்டல் செய்கிறீர்கள். ஆனால் பாருங்கள் பிரபாஸ் நடித்த ஆதி புருஷ் எதோ கார்ட்டூன் போல உள்ளது. கார்டூனில் கூட இதை விட நல்ல கிராபிக்ஸ் இருக்கும். ஆனால் உங்கள் படத்தில் மிக மோசமாக இருக்கிறது. இதை வைத்துக்கொண்டுதான் நீங்கள் தமிழ் சினிமாவை கிண்டல் செய்கிறீர்களா என்று கேட்டு மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

பாகுபலி
நடிகர் பிரபாஸ் பாகுபலிக்கு பின் நடித்த படங்கள் எல்லாமே வரிசையாக பிளாப் ஆகிக்கொண்டு இருக்கிறது. முக்கியமாக ராதே ஷியாம் மிகப்பெரிய அளவில் பிளாப் ஆனது . அதேபோல் சாஹோ பெரிய பிளாப் ஆனது. அதை தொடர்ந்து தற்போது ஆதி புருஷ் பார்த்த உடனே பிளாப் என்பது தெளிவாக தெரிகிறது. இதை வைத்து பிரபாஸை பலரும் கலாய்த்து வருகிறார்கள். நீங்கள் பான் இந்தியா படங்களில் நடித்தது போதும் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

பிரபாஸ்
அதேபோல் இந்த படத்தின் கிராபிக்ஸை பலரும் கிண்டல் செய்கின்றனர். இதெல்லாம் கிராபிக்ஸ்சா. வீடியோ கேம் பார்ப்பது போல இருக்கிறது. இதற்கு ஏன் 500 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போட்டீர்கள். இது என்ன? இப்படி படங்களை எடுத்துவிட்டு பொன்னியின் செல்வன் போன்ற நல்ல படங்களை விமர்சனம் செய்வீர்களா என்றும் பலர் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துள்ளனர்.

பொன்னியின் செல்வன்
பாகுபலி - பொன்னியின் செல்வன் இடையே கடுமையான போட்டி இணையத்தில் உலவி வருகிறது. முக்கியமாக தெலுங்கு ரசிகர்கள் எப்படியாவது பொன்னியின் செல்வனை பிளாப் ஆக்கிவிட வேண்டும் வேண்டும் என்று முயன்று கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில்தான் நேரம் பார்த்து ஆதி புருஷ் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதை தமிழர்கள் வைத்து செய்து கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக படத்தில் ராவணன் பார்க்க இஸ்லாமியர் போல இருப்பதையம் கிண்டல் செய்து வருகின்றனர்..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications