"சூப்பர்மேன் விராட் .. தப்பித்த ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல்" இந்தியா - பாகிஸ்தான் டாப் மீம்ஸ் இதோ!
சென்னை: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வெளியிட்ட மீம்ஸ்களை பற்றி பார்க்கலாம்.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12ல் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது. இதன்பின்னர் களமிறங்கிய இந்திய அணி, விராட் கோலியின் போராட்டத்தால் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

சூப்பர்மேன் விராட் கோலி
இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோலி தொடக்க நேரத்தில் நிதானமாக ஆடி, 10 ஓவர்களுக்கு பின் அதிரடிக்கு மாறினார். ஒரு கட்டத்தில் 8 பந்துகளுக்கு 26 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசினார். இதனால் விராட் கோலியை ரசிகர்கள் சூப்பர் மேனோடு ஒப்பிட்டு மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

பாக். வீரர் மசூத்
பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கின் போது மூன்றாவது வீரராக களமிறங்கிய மசூத் இந்திய பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் 42 பந்துகளுக்கு 52 ரன்கள் விளாசினார். தொடக்கத்தில் விக்கெட்டுகள் சரியும் போது நிதானமாக ஆடிய அவர், கடைசி நேரத்தில் பாகிஸ்தான் அணி கவுரவமாக இலக்கை எட்ட காரணமாக அமைந்தார். அவருக்கு மற்ற பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்து உதவாமல் இருந்ததை, வெடிகுண்டு முருகேசன் படத்தில் வரும் வடிவேலுவுடன் இணைத்து மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

தப்பித்த ரோஹித் ஷர்மா
அதேபோல் ரோஹித் ஷர்மா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்த பின்னர், ஒரு கட்டத்தில் இந்திய அணி தோல்வியடையும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விராட் கோலியும் அசாத்திய சாதனையால் இந்திய அணி வெற்றிபெற்றது. அதனை இந்திய அணி தூக்கில் தொங்க இருந்ததில் இருந்து காப்பாற்றியது போலவும், விமர்சனர்களிடம் இருந்து ரோஹித் ஷர்மா தப்பியதையும் சந்தானம், கஞ்சா கருப்பு படங்களை வைத்து வெளியாகிய மீம்ஸ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

விராட் கோலி கம்பேக்
ஆசியக் கோப்பையின் போது விராட் கோலி கம்பேக் கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் உட்பட பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அதேபோல் அந்த அணியின் ரிஸ்வான் இதுவும் கடந்து போகும் என்று ஆறுதல் கூறியிருந்தார். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி கம்பேக் கொடுத்ததை வைத்து ஏராளமான மீம்ஸ் வெளியிடப்பட்டு வருகிறது.

கேஎல் ராகுல் மீது விமர்சனம்
இந்திய அணியின் கேஎல் ராகுல் இன்றையப் போட்டியில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எப்போதும் சிறிய அணிகளுக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசும் கேஎல் ராகுல், பெரிய அணிகளுக்கு எதிராக மோசமாக ஆட்டமிழப்பதை ரசிகர்கள் விமர்சித்து மீம் வெளியிட்டுள்ளனர். அண்மையில் வெளியாகிய எறும்பின் புகைப்படத்தை ஒப்பிட்டு வெளியாகிய மீம்ஸ் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரோஹித் ஷர்மா பேட்டிங்
இன்றைய ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 ஆட்டங்களில் தொடர்ந்து மோசமாக ஆடும் பேட்ஸ்மேனாகவும் ரோஹித் ஷர்மா பார்க்கப்படுகிறார். இதனை வைத்து அவர் புகைப்படத்தை வைத்தே வெளியிடப்பட்ட மீம்ஸ் ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
-
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
யாராவது அந்த பையனை கொஞ்சம் நிப்பாட்டுங்கப்பா.. 15 வயசுல இவ்வளவு கோபம் ஆகாது வைபவ் சூர்யவன்ஷி! -
யார் முதலில் வம்பு இழுத்தது? வைபவ் சூர்யவன்ஷி சர்ச்சை குறித்து மவுனம் கலைத்த இந்திய பயிற்சியாளர்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications