ஆட்சி இருக்கட்டும்.. பாலையாவிற்கு நேஷனல் அவார்ட் தாங்க.. மோடிக்கு நாயுடு பிரஷர்.. டிரெண்டிங் மீம்ஸ்
சென்னை; 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பட்ட மெஜாரிட்டி பெறாமல் தோல்வி அடைந்த நிலையில் அதை வைத்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
2024 லோக்சபா தேர்தலில் பாஜக எதிர்பார்க்காத தோல்வி அடைந்து உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. இந்த நிலையில்தான் வாக்கு எண்ணிக்கை செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.
இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
சந்திரபாபு நாயுடு - நிதிஷ் கிங்: இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு - நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும்.

பாஜக ஆட்சி அமைக்க பீகாரில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 12 எம்பிக்கள் உள்ளனர். பாஜக ஆட்சி அமைக்க ஆந்திர பிரதேசத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 16 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு இன்றி பாஜக ஆட்சி அமைக்க முடியாது.
என்ன கோரிக்கை; சந்திர பாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் பாஜக ஆட்சிக்கு ஆதரவு தருகிறோம், மோடி ஆட்சி அமைக்க ஆதரவு தருகிறோம் என்று கூறிவிட்டனர். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நாள் இன்னும் குறிக்கப்படவில்லை.
மீம்ஸ்: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மை பெற முடியாததை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர். இதை எல்லாம் வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

மோடியிடம் சந்திரபாபு நாயுடு.. பாலையாவிற்கு ஒரு நேஷனல் அவார்ட் கொடுங்க என்று பிரஷர் கொடுப்பதாக மீம்ஸ் போட்டுள்ளனர். மேலும் பங்கு.. நம்ம ஸ்டேட்ல எந்த நடிகரெல்லாம் இன்னும் நேஷனல் அவார்ட் வாங்கல.. ஒரு லிஸ்ட் எடு.. என்று மீம்ஸ் போட்டுள்ளனர்.

அங்க யாரு 4பேர் கேமராவோட.. என் பெர்சனல் போட்டோகிராபர் காரு.. இதெல்லாம் எனக்கு பிடிக்காது.. வேலய விட்டு தூக்கு.. என்று மோடியின் போட்டோகிராபி காதல் பற்றியும் மீம்ஸ் போட்டுள்ளனர்.

பதவியேற்பு விழா கிராண்ட்டா வைக்கிறது எல்லாம் எனக்கு பிடிக்காது.. பதவி ஏத்துகிட்டேன்னு ட்வீட் மட்டும் போடு.. போதும் என்று கிண்டலாக மீம்ஸ் போட்டுள்ளனர்.

அக்னிவீர் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கூறுகிறது. அதேபோல் இந்த திட்டம் வேண்டாம் என்று லோக் ஜனதா கட்சியின் சிராக் பாஸ்வான் தெரிவிக்கிறார். ஆனால் பாஜக இந்த திட்டத்தை கைவிடும் எண்ணத்தில் இல்லை. இதை வைத்தும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

என்டிஏ கூட்டணி எம்பி-க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வந்த நரேந்திர மோடி, அங்கு வைக்கப்பட்டிருந்த அரசியல் சாசன புத்தகத்தை வணங்கினார். இதை வைத்தும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications