இது காயம் பட்ட சிங்கம் இல்ல.. காலாவதியான சிங்கம்.. ஆர்சிபி டீமை மரண கலாய் பண்ணும் மீம்ஸ்
துபாய்: ஐபிஎல் தொடரில் நேற்று கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மிக மிக மட்டமாக ஆடி தோற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. அப்பாடா.. ஒருவழியா இப்போதான் பெங்களூர் டீம் வழக்கமான ஃபார்முக்கு வந்துடுச்சி என்று ரசிகர்கள் கேலி செய்யும் அளவுக்கு போய்விட்டது நிலைமை.
ஒரு டீம் ஏதாவது ஒரு விஷயத்தில் வீக்கா இருந்தால் பரவாயில்லை. பந்து வீச்சு, ஃபீல்டிங், பேட்டிங் அப்படீன்னு மொத்தமா மூனு டிபார்ட்மென்ட்டிலும் வீக்காக இருக்கும் டீம் என்றால் அது ஆர்சிபிதான்.
206 ரன்களை பந்து வீச்சில் வாரி வழங்கிய ஆர்சிபி, ஃபீல்டிங்கிலும் கோட்டை விட்டது. ராகுல் கொடுத்த 2 கேட்சுகளை கேப்டன் கோலியே கீழே விட்டு வீணடித்தார். அடுத்ததாக பேட்டிங்கிலும் அதே சொதப்பல். 109 ரன்களுக்கு கடையை சாத்திவிட்டு கிளம்பியாச்சு. 17 ஓவர்கள்தான் ஆர்சிபி பேட்ஸ்மென்களால் களத்தில் நிற்க முடிந்தது.

குளுகுளுன்னு இருந்துச்சா
சும்மாவே, ஆர்சிபி டீம்னா கிண்டலாகத்தான் பார்ப்பார்கள். இப்படி ஒரு மட்டமான ஆட்டத்திற்கு பிறகு நம்மாட்களை பற்றி சொல்லனுமா. மீம்ஸ் போட்டு கிழிச்சி தொங்க விடுகிறார்கள். அப்படியான காமெடி மீம்ஸ்கள் சிலவற்றை பாருங்களேன். முதல் போட்டியில் ஆர்சிபி வென்றதும் (தெரியாத்தனமாக?) ரன் ரேட்டில் டாப்புக்கு போயிருந்தது. இப்போ அதல பாதாளத்திற்கு போய்விட்டது. அதை கிண்டல் செய்கிறது இந்த மீம்.

வாரி வழங்குவோம்ல
ஒருவர் போல் போட்டுள்ளார். அதில் எரிச்ச மயிரூட்டுகிறதுன்னு இருக்கிறது. அது வேண்டாம்- அவருக்கு வந்த ரிப்ளேயில்தான் சூரிய வம்சம் சீன் இருக்கு. அதை மட்டும் வைங்க. இல்லைன்னா கெட்ட வார்த்தைன்னு பஞ்சாயத்து ஆகும்.

அடிபட்ட சிங்கம்
கடந்த சில ஐபிஎல் தொடரில் ஆர்சிபி ரசிகர்கள் கூறும் வசனம், கேஜிஎப் படத்தில் இடம் பெற்ற, "காயம் பட்ட சிங்கத்தோட மூச்சுக் காத்து அதன் கர்ஜனையைவிட பயங்கரமா இருக்கும்" என்பதுதான். அதாவது, இவுங்க தோற்று காயம் பட்டுட்டாங்களாம். அதனால வெறி கொண்டு அடிச்சி வின் பண்ணிருவாங்களாம். ஆனா எப்போன்னுதான் தெரியல. எனவேதான், அது காயம் பட்ட சிங்கம் இல்லப்பா. காயத்தால் காலாவதியான சிங்கமாகிடுச்சின்னு சொல்கிறது இந்த மீம்.

பழகிடுச்சில்ல
இப்படி ஒரு தோல்வியை சந்தித்தும், ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்களே. அது ஏன் தெரியுமா? புதுசா அடிவாங்குனாத்தானே வலிக்கும். பழகிப்போச்சில்ல. இதைத்தான், விவேக் மீம் மூலம் சொல்கிறார் இந்த நெட்டிசன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications