எம்ஜிஆரும்,ஜெயலலிதாவும் அதிமுக னுகூடவா தெரியாது மாதவா? .. "ஓட்டல்" ஆரம்பம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் எம்ஜெடிஎம்கே என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். சமூக வலைத்தளங்களில் மாதவனை கிண்டலடித்துள்ளனர்.

எம்ஜிஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்றக்கழகம் என்பதுதான் கட்சியின் பெயர். ஜெயலலிதா சமாதிக்கு சென்று கட்சியையும், கொடியையும் அறிமுகம் செய்த அவர், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப தான்தான் சரியான ஆள் என்றும் மாதவன் கூறியுள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை மீட்பேன் என்றும் மாதவன் கூறியதுதான் மிகப்பெரிய காமெடி. மாதவனை மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

எந்த கட்சி

எம்ஜிஆரும்,ஜெயலலிதாவும் அதிமுக னுகூட தெரியாத தத்தியா இருக்கானே என்று கேட்டுள்ளார் ஒரு வலைஞர்

வெற்றிடத்தை நிரப்புவேன்

வெற்றிடத்தை நிரப்புவேன் என்று பேட்டி கொடுக்கும் மாதவனைப் பார்த்து முதல்ல உங்க வீட்டுல இடம் பிடிக்க பாருங்க..தெருவுல நின்று பேசாமல் ! என்று கூறியுள்ளார் ஒருவர்.

தீபாவை மீட்கணும் மாதவா?

இரட்டை இலையை மீட்பேன் என்று மாதவன் கூறிய நிலையில் முதல்ல தீபாவ உன் பக்கம் மீட்டு வர வைக்கிற வழிய பாரு மாதவா என்று கூறியுள்ளார் ஒரு வலைஞர். மற்றொருவரோ, இரட்டை இலை டாலர் போட்ட செயினை அடகு வச்சிருப்பாரோ என்று கேட்கிறாரோ என்று கேட்டுள்ளார்.

இவன் எதுக்கு?

இப்ப இவன் எதுக்கு தேவையில்லாம பீல்டிங் செட் பண்றான் என்று கேட்டுள்ளார் ஒரு வலைஞர்.

இரட்டை இலை

அடுத்த கட்சி சின்னத்தை நீங்க எப்படி சார் மீட்பீங்க... மைக் கிடைச்சா என்ன வேணும்னாலும் பேசுவீங்களோ? என்கிறார் இவர்.

புது கட்சி

வாங்களேன் ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்... இதுதான் இப்போது புது டிரெண்ட் என்று கூறியுள்ளார் இந்த வலைஞர். இன்னும் எத்தனை கட்சிகளை இந்த தமிழகம் சந்திக்கப் போகிறதோ?

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Deepa husband Madhavan launch new party MJDMK. Twitterist memes create and troll social media.
Please Wait while comments are loading...