கபாலி ரஜினி.. இளையராஜாவின் தென்றல்.. தெறிக்க விடும் சிஎஸ்கே மீம்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மீண்டும் வந்துள்ளது குறித்து ரசிகர்கள் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் மூலம் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் சென்னை அணிக்கு 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டு அது தற்போது முடிவடைந்து விட்டது. இதனால் ரசிகர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

பேஸ்புக்கில் ஒரு வீடியோ மீம்ஸில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் திரும்பி வந்து ரசிகர்களை மகிழ்விப்பது குறித்து கனகச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

இளையராஜாவின் தென்றல் வந்து தீண்டும்போதும் பாடலின் இசையை வைத்து கபாலி படத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தேவை நீண்ட நாள்களுக்கு பிறகு சந்திக்கும் காட்சியை வைத்து அதில் தோன்றுபவர்களை கிரிக்கெட் வீரர்களாக சித்தரித்து கலக்கலாக உள்ளது. அதை நீங்களும் ரசித்து மகிழுங்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A video memes that shows about how Chennai Super Kings react with the players and its fans when it meets after long time. This video goes viral.
Please Wait while comments are loading...