அதென்ன டிசம்பர்ல சென்னைக்கு மட்டுமே புயல் வருது.. நாமளும் கடலோர மாவட்டம்தானடா!
சென்னை: மீம்ஸ் போட்டு இந்தாண்டிற்கு பேர்வெல் கொடுக்கும் வேலையை இப்போதே ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.
புத்தாண்டு பிறக்கிறது என்றால், இந்தாண்டு அதை செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டும் என சபதங்கள் எடுப்பது நம் மக்களின் வழக்கம். ஆனால், அதை எல்லோராலும் முழுவதுமாக ஆண்டு முழுவதும் செய்து முடிக்க முடியாது. தாங்கள் செய்யாமல் விட்டதற்கு, அந்த ஆண்டையே குறையாகக் கூறுவார்கள்.

இதனாலேயே ஒவ்வொரு ஆண்டு முடியும் போதும், அந்த ஆண்டை திட்டி மீம்ஸ்களைப் பகிர்வதை சமீபகாலமாக வழக்கமாக வைத்திருக்கின்றனர் நெட்டிசன்கள். அதுவும் இந்தாண்டு புயல், மழை, வெள்ளம் என டிசம்பர் ஒரு வழி செய்துவிட, கேட்கவா வேண்டும், டிசம்பரையும் சேர்த்து மீம்ஸ்களில் கலாய்த்து வருகின்றனர். 'நவம்பர் வரை குலாப்ஜாமுன் மாதிரி ஸ்மூத்தாக இருந்த வாழ்க்கை, மிக்ஜாம் புயலால் டிராபிக் ஜாம் ஆகிவிட்டதாக' மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
என்னதான் கலாய்த்தாலும் எதிர்தரப்பு வாதத்தையும் கேட்கவேண்டும் என்ற நியாயப்படி, 'இப்டிகூட மழை பெய்யலண்ணா அப்புறம் எனக்கென்ன மரியாதை' என டிசம்பர் மாதமும் வாதாடும்படி இருக்கும் மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில்பட்ட நகைச்சுவையான டிசம்பர் மாத மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications