பஜ்ரங்கி பாய்ஜான் படம் மூலம் பிரபலமான பாகிஸ்தான் செய்தியாளர்..மீண்டும் வெளியான வைரல் வீடியோ!
பாலிவுட் படமான பஜ்ரங்கி பாய்ஜான் மூலம் வைரலான பாகிஸ்தான் செய்தியாளர் சந்த் நவாப் தற்போது மீண்டும் ஒரு வீடியோ மூலம் வைரலாகி உள்ளார்.
Recommended Video

கராச்சி: பாலிவுட் படமான பஜ்ரங்கி பாய்ஜான் மூலம் வைரலான பாகிஸ்தான் செய்தியாளர் சந்த் நவாப் தற்போது மீண்டும் ஒரு வீடியோ மூலம் வைரலாகி உள்ளார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் பல விஷயங்களில் எப்போதும் ஒரே மாதிரி சிந்தித்தது கிடையாது. முக்கியமாக கலை, ரசனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இரண்டு நாடுகளும் ஏட்டிக்குப்போட்டிதான்.
ஆனால் இரண்டு நாட்டு மக்களையும் ஒருவர் பெரிய அளவில் கவர்ந்து இருக்கிறார். பாகிஸ்தான் செய்தியாளர் சந்த் நவாப் இரண்டு நாட்டு மக்களுக்கும் செல்லமான செய்தியாளராக இருக்கிறார்.

என்ன கதாபாத்திரம்
இவர் பிரபலமானது சல்மான் கான் நடித்த பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் இருந்துதான். அந்த படத்தில் நடித்த பிரபல நடிகர் நவ்சுதின் சித்திக், இவரது கதாபாத்திரத்தைதான் நடித்து இருந்தார். அந்த படம் இந்தியா பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகளிலும் ஹிட் அடித்தது. இரண்டு நாட்டு உறவை ஒரு குழந்தை, சல்மான் கான் என்ற இரண்டு பேரை வைத்து மிக அழகாக சொல்லி இருப்பார்கள்.

நடந்தது
அந்த படத்தில், நவ்சுதின் சித்திக் வாய்ப்பு கிடைக்காத, கேமரா முன்பு தவறாக பேச கூடிய திறமையற்ற காமெடியான பத்திரிக்கையாளராக நடித்திருப்பார். பாகிஸ்தான் செய்தியாளர் சந்த் நவாப் உண்மையிலேயே அப்படித்தான். அவர் உண்மையாகவே கேமராவை பார்த்து நடுங்கும் செய்தியாளர்தான். இவர் திக்கி திக்கி பேசக்கூடிய நபர்தான்.

வைரல்
இவர் கேமரா முன்பு சொதப்பிய வீடியோ பல இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. முக்கியமாக கராச்சி ரயில் நிலையத்தில் கருப்பு டிக்கெட் விற்கப்படுவது குறித்தும் இவர் வீடியோ வெளியிட்டதுதான் பெரிய அளவில் வைரல் ஆனது. அந்த சீனை பஜ்ரங்கி பாய்ஜான் படத்திலும் வைத்து இருப்பார்கள். இதற்காக அவர் அப்போது போலீசிடம் அடி கூட வாங்கினார்.
|
மீண்டும் மீண்டும்
இந்த நிலையில் இவரது இன்னொரு வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது. சுவீட் கடை ஒன்றில் இவர் தவறாக பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் கேமரா மேன் பெயரை கூட தவறாக உச்சரித்து கடைசியில் நிறைய சுவீட்களை தின்றுவிட்டு இவர் செல்வது பெரிய வைரலாகி உள்ளது. இந்தியா பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகளிலும் இவர் வீடியோவை ஷேர் செய்து கொண்டாடி வருகிறார்கள்.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications