நீங்கள் நீங்களாகவே இருங்கள்!
நீ நீயாக இரு.. மத்தவங்களாக நீ இருக்க முடியாது.. இது ஆஸ்கர் வைல்ட் சொன்ன அருமையான வாசகம். இன்று நிறையப் பேருக்கு இந்த வாசகத்தை நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
அவன் அப்படி இருக்கிறான், இவன் இப்படி இருக்கிறான். அவரைப் போல மாற வேண்டும். இவரைப் போல ஆக வேண்டும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். அங்குதான் தவறு செய்கிறார்கள். சறுக்கலின் முதல் படியே அதுதான்.
உண்மையில் நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்களது அடையாளம், முகவரி அதுதான். உங்களிடமிருந்துதான் உங்களுக்கான அடையாளம் வெளிப்பட வேண்டும். யாருக்காகவும் உங்கள் தனித்துவத்தை மாற்றிக் கொள்ளாதீர்கள்.

முன்மாதிரியாக இருக்க வேண்டும்
நீங்கள் மற்றவரைப் போல் ஆக வேண்டும் என்பதை விட மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்திறமை இருக்கும் அதை வெளிக்கொணருங்கள். தனித்திறமைகளின் மூலமாக உங்களுக்கான அடையாளத்தை உருவாக்குங்கள். பல கோடி மக்கள் வாழும் நாட்டில் காமராஜர் ஆட்சியையும் எம்.ஜி.ஆர் ஆட்சியையும் நூறாண்டு காலம் ஆனாலும் நம்மால் அவர்களை மறக்க முடியாது.

ஆளுக்கொரு ஆளுமை
காரணம் அவர்களுடைய ஆளுமைத்திறன் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு இருந்துதான். அவர்களைப் போல உங்கள் திறமைகளின் மூலம் சாதனையாளராக மாறுங்கள். நடிகர் ரஜினிகாந்த் என்றாலே அவருடைய ஸ்டைலும் நடிகர் கமல்ஹாசன் அவர்களுடைய நடிப்புத்திறமையும் தல அஜித் அவர்களின் இயல்பான நடிப்பும் தளபதியின் நடன அழகையும் கண்டு மயங்காதவர்களே இல்லை. இவர்களைப் போல நாமும் நம்முடைய திறமைகளை வெளிக்கொணர்வோம்.

நல்ல உள்ளங்கள்
வெளியே ஒரு இட்லி சாப்பிட்டால் நான்கு ரூபாயாவது கொடுக்க வேண்டும் ஆனால் கமலாத்தாள் பாட்டியிடம் இட்லி ஒரு ரூபாய் தான். அவருடைய இந்த நல்ல உள்ளம் தான் அவருடைய அடையாளம். இப்படி சாய்னா நேவால் சானியா மிர்சா கல்பனா சாவ்லா போன்ற பலர் தங்களின் திறமைகளின் மூலம் தங்கள் வாழ்க்கைப் பாதையை வெற்றிப் பாதையாக மாற்றியுள்ளனர்.

வெளிக் கொணருங்கள்
பிழைப்புக்காக நீங்கள் கிடைத்த வேலையைச் செய்தாலும் ஓய்வுநேரங்களில் உங்கள் திறமைகளை வெளிக்கொணருங்கள். அதுவே உங்களுக்கு ஒரு காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களைப் பார்த்து நான் அவர்களைப் போல் ஆக வேண்டும் என்றெண்ணாமல் அவர்களிடம் நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை உங்கள் ஸ்டைலுக்கு ஏற்றவாறு மாற்றுங்கள்.

தட்டி எழுப்புங்கள்
உங்களுக்குள் உறங்கிக்கிடக்கும் உங்கள் திறமைகளைத் தட்டி எழுப்புங்கள். உங்கள் வாழ்க்கைப் பயணத்தை சாதனைப் பயணமாக மாற்றுங்கள். உங்கள் திறமையினால் உங்களுக்கொரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதில் கிடைக்கும் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை எனலாம். நீங்கள் எப்போதும் நீங்களாகவே இருங்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்கள் சுயத்தை இழந்துவிடாதீர்கள்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications