பளிச்சுன்னு தேங்காய் உடைச்ச மாதிரி சொல்லிடுங்க.. ஜாலியா இருங்க!
மார்க் ட்வைன் வார்த்தை இது.. பளிச்சென்று உண்மைகளை சொல்லி விடுங்க... எதையுமே ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியமே உங்களுக்கு இருக்காது..!
எத்தனை உண்மை பார்த்தீங்களா.. மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல், பளிச்சென்று எல்லாவற்றையும் சொல்லும் போது மனசு ரிலாக்ஸ் ஆகிறது.. லேசாகிறது.. மகிழ்ச்சி அடைகிறது.. சுமை குறைந்து நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது.
பலர் இருக்கிறார்கள்.. எல்லாவற்றையும் மனதில் போட்டு அடைத்து வைத்திருப்பார்கள்.. கடையில் பொருட்களை அடுக்கி வைத்திருப்பது போல.. அதுதான் பல பிரச்சினைகளுக்கு அடித்தளமே.

வாய்மையே வெல்லும் என்பார்கள் எப்போதும் உண்மையே மற்றவரிடம் பேசுங்கள். நீங்கள் நினைப்பதை மனதிற்குள்ளேயே பூட்டி வைக்காமல் பட்டெனக் கூறி விடுங்கள். சொல்ல வேண்டியதை மனதிற்குள்ளேயே சொல்லாமல் பூட்டி வைத்து இறுதியில் அதை சொல்லாமலே சென்ற மனிதர்கள் பலர்.
நம் மனதில் தோன்றியவற்றை நம் இணையிடமோ அல்லது உங்கள் நண்பர்களிடமோ கூறுங்கள். ஒரு விஷயத்தைச் சொல்லாமல் மனதிற்குள்ளேயே பூட்டி வைப்பதால் காலப்போக்கில் மனஅழுத்தம் ஏற்பட்டு மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று நினைத்துக் கவலைப்படாமல் உங்கள் மனதுக்குப் பிடித்தச் செயல்களைச் செய்யுங்கள். எந்த விஷயத்தையும் மனதில் தோன்றிய கருத்துகளைக் கூறி விடுங்கள். அது மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். மனதில் நினைப்பதை பூட்டி பூட்டி வைப்பதை விட அதை கூறி அதனால் ஏதேனும் விளைவு ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளவும் நாம் தைரியமாக இருக்க வேண்டும்.
உங்கள் நேரத்தைக் கொஞ்சம் உங்கள் வீட்டிலுள்ள பெரியோர்களிடமும் குழந்தைகளிடமும் அவர்கள் மனதில் உள்ளதைக் கேட்டறியுங்கள். பிள்ளைகள் உங்களிடம் கூற தயக்கம் காட்டினால் அன்பாகப் பேசி அந்த தயக்கத்தைப் போக்குங்கள். நீங்கள் நினைத்தால் உங்களை மட்டுமல்ல உங்கள் சுற்றத்தாரையும் ரிலாக்சாக வைத்துக் கொள்ள முடியும்.உங்கள் மனதில் நினைப்பதை வெளிப்படையா பேசுங்க மனதை எப்போதும் லேசா வச்சுக்கங்க.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications