சிம்பிளாக இருங்க... எளிமையே ஆடம்பரம்!
எளிமையை விட ஆடம்பரமானது எதுவும் இல்லை என்று சொல்வார் லியோனார்டா டாவின்சி. அந்த அளவுக்கு நமது வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் எதையுமே சொகுசாக கருதி அதை அனுபவிக்க வேண்டும். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படக் கூடாது.
இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதற்கு ஆசைப்படாதே என பெரியவர்கள் கூறுவார்கள். அது போல நமக்குக் கிடைத்தவற்றை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும் அதை விடுத்து எனக்கு இது கிடைக்கவில்லை அது கிடைக்கவில்லை என கிடைத்த வாழ்வை வீணாக்காதீர்கள்.

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தீய செயல்களில் ஈடுபடாதீர்கள். என்றும் சிறப்புடன் வாழ நல்ல செயல்களின் மூலம் கிடைக்கும் வருமானம் சிறந்தது. தீய வழியில் ஈட்டும் பொருள் சில காலம் மட்டுமே மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆதலால் நற்வழியில் பொருள் ஈட்டுங்கள். கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியோடு வாழுங்கள். ஒரு பொருள் உங்களுக்குப் புதிதாக கிடைத்தது என்றால் அதனால் உங்களுக்கு நன்மை ஏற்படின் அப்பொருள் இல்லாதவரது நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும்.
நமக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமும் உள்ளது. அதை நினைத்து நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். அந்த அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பலர் வருத்தப்படுகின்றனர். அவர்களை நினைத்து நாம் நம் வாழ்க்கையே பரவாயில்லை இந்த வாழ்வை கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.ஒவ்வொரு நாளையும் சிறப்பானதாக மாற்றுங்கள்.
மானிடப்பிறவி ஒரு முறை தான் அதில் கிடைத்த அழகான வாழ்வை மற்றவரோடு ஒப்பிட்டு கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் கிடைத்த வாழ்வை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு அடுத்தவர் மூக்கில் விரல் வைக்கும்படி வாழ்ந்துக் காட்டுங்கள்.எளிமையாக வாழ்வதால் எதுவும் குறைந்துப் போவதில்லை. எளிமையே சிறந்த ஆடம்பரம். எளிமையாக வாழுங்கள் எட்டுதிக்கும் உங்கள் புகழ் பரவட்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications