அதே ஹேர்ஸ்டைல்.. அதே பிளவுஸ்.. கையில் பேப்பர்.. கடகடன்னு புள்ளி விவரம்.. யார்னு தெரியுதா பாருங்க!
பீலா ராஜேஷ் போலவே சிறுமி வேடமிட்டு பேசிய வீடியோ வைரலாகிறது
சென்னை: "அதே மாதிரி கொண்டை.. அதே போல பிளவுஸ்.. கையில் பேப்பரை வைத்து கொண்டு கொரோனா தொடர்பான புள்ளி விபரங்களை வாசிக்கிறார் ஒரு சிறுமி.. மிக குறுகிய காலத்தில் தமிழக மக்களிடம் பிரபலமான பீலா ராஜேஷின் கெட்-அப்பில் இந்த சிறுமி செய்தியாளர்கள் சந்திப்பு போல பேசி வீடியோ வெளியிட்டது அனைவரையும் கவர்ந்து வருகிறது!!
Recommended Video
தற்போது கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனாவிற்கு பயந்து பலர் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். அரசும் ஊரடங்கு உத்தரவு போட்டு மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தி வருகிறது.

சாயங்காலம் 6 மணி ஆனால் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்... தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தினமும் தந்து வருகிறார்.
பீலா ராஜேஷின் செய்தியாளர் சந்திப்பு என்றாலே தமிழக மக்கள் உன்னிப்பாக கவனிக்க தொடங்கி விடுவார்கள்.. மிக குறுகிய நாளில் மக்கள் மனதில் நின்றுவிட்டார் பீலா ராஜேஷ்.. இதற்கு காரணம் தற்போதைய தமிழகத்தின் சூழல் மட்டுமில்லை, அபாயகரமான தகவல் என்றாலும் அதை மக்களிடம் பீதி ஏற்படுத்தாத வகையில் பீலா ராஜேஷ் எடுத்துரைக்கும் பாங்குதான்!
என்ன சொல்ல வேண்டுமோ அந்த உரிய தகவலை மட்டும் பதட்டமோ, பரபரப்போ இல்லாமல் தெளிவாக விளக்குவதுதான்.. குறிப்பாக மக்களுக்கு ஒருவித டென்ஷன் தன்மை இல்லாமல் பார்த்து கொள்வதும் மிக மிக கவனித்தக்க ஒன்று.. இதனை பீலா ராஜேஷ் சிறப்பாகவே கையாண்டு வருகிறார்!
அதனால்தான் சிறு குழந்தைகளையும் இவரது செய்தியாளர் சந்திப்பு என்பது கவர்ந்துள்ளது... இன்றைக்கு இவர் என்ன சொல்ல போகிறரோ என்ற ஆர்வத்தையும் சிறுவர், சிறுமியரிடமும் ஏற்படுத்தி வருகிறது.. அந்த வகையில், பீலா ராஜேஷ் கெட்-அப்-பில் ஒரு சிறுமி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. செய்தியாளர் சந்திப்பில் அவர் எப்படி பேசுவாரோ அதுபோல புள்ளிவிவரத்துடன் இந்த சிறுமி பேசுவது ரசிக்கும்படியாக உள்ளது.
சேலத்தை சேர்ந்த இந்த சிறுமியின் பெயர் லோகனந்த ஸ்ரீ.. பீலா ராஜேஷ் போலவே ஹேர்ஸ்டைல், அதேபோல பிளவுஸ், அதே போல சேலை அணிந்து, கையில் ஒரு பேப்பரை வைத்து கொண்டு கொரோனா தொடர்பான புள்ளி விபரங்களை தட்டு தடங்கல் இல்லாமல் கடகடவென வாசிக்கிறார்... இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ஏகப்பட்ட பேர் ஷேர் செய்து வருகிறார்கள்! மிக மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் நிற்பவர்கள் வெகுசிலரே.. அதில் பீலா ராஜேஷும் ஒருவர் என்பதை மறுக்க முடியாது.. அதற்கு ஒரு உதாரணம்தான் இது!!












Click it and Unblock the Notifications