அசைவின்றி உட்கார்ந்திருந்த நபர்.. மெல்ல அருகில் சென்ற ஜெயக்குமார்.. என்ன மனசு சார் உங்களுக்கு!
ஆதரவற்றோருக்கு அமைச்சர் ஜெயக்குமார் உணவளித்தார்
சென்னை: காய்கறி கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார் அமைச்சர் ஜெயக்குமார்.. அப்போது வழியில் உணவின்றி உட்கார்ந்திருந்த ஒரு தாத்தாவுக்கு சாப்பாடு வாங்கி தந்து அடுத்தடுத்த உதவிகளை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக இறங்கி வருகிறது.. இதை தவிர, அந்தந்த தொகுதி முக்கிய பிரமுகர்களும் வைரஸ் தொற்று பரவாமல் இருக்கும் நடவடிக்கைகளில் இறங்கி வருகின்றனர்.

அந்த வகையில் 4 நாளைக்கு முன்பு மாநகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து மீன்வளத் துறை அமைச்சரும், ராயபுரம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெயக்குமார், தனது தொகுதியில் மிஷினில் கிருமிநாசினியை தெளித்தார். எம்பியே தன் தொகுதிக்குள் கிருமிநாசினியை தெளித்து வருவதை கண்டு மக்கள் வியந்து பார்த்தனர்.
இப்போதும் ஜெயக்குமார் செய்த செயல் அனைவரிடமும் பாராட்டை பெற்று வருகிறது.. சென்னை துறைமுகம் பகுதியில் காய்கறி கடைகளுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார் அமைச்சர்.. அப்போது வழியில் துறைமுகம் தொகுதி கிளைவ் பகுதி அருகே ஒரு தாத்தா உட்கார்ந்திருந்தார்.. ஆதரவற்றவர்.. எப்படியும் 80 வயது இருக்கும்.. முகமெல்லாம் வாடி இருந்தது.. சாப்பிட்டு நாள் கணக்கில் ஆனதைபோல் சோர்வுடன் ஒடுங்கி காணப்பட்டார்.
இவரை பார்த்த அமைச்சர், உடனே காரை நிறுத்திவிட்டு, முதியவர் அருகில் சென்று உட்கார்ந்தார்.. அமைச்சரை பார்த்ததும் தாத்தா வணக்கம் சொன்னார்.. ஜெயக்குமாரும் பதில் வணக்கம் தெரிவித்து, ஒரு மாஸ்க்கை தந்து அவரை போட சொன்னார். உடனிருந்தவர்களிடம் சாப்பாடும் தண்ணீரும் கொண்டு வர சொல்லி அவருக்கு தந்தார். ஒரு சால்வையும் வழங்கிய அமைச்சர், தாத்தாவுக்கு செலவிற்கு பணமும் தந்தார்.
பிறகு மாநகராட்சி அதிகாரிகளுக்கு போன் செய்து முதியவர் பற்றிய தகவலை சொல்லி உடனடியாக காப்பகத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார்.. அந்த முதியவர் பெயர் திருநாவுக்கரசு என்பதும், ஐசிஎப் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது! அமைச்சரின் இந்த செயல் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications