"உங்களுக்கு ஏதாவது சிரமமா.. தண்ணி குடிக்க முடியலை.. "ஐ வாஸ் எமோஷனல்".. கண் கலங்கிய விஜயபாஸ்கர்..!

டாக்டர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "உங்களுக்கு ஏதாவது சிரமமா இருக்கான்னு கேட்டேன்.. தண்ணி குடிக்க முடியல சார்ன்னு சொல்லும்போது "ஐ வாஸ் எமோஷனல்" என்று விஜயபாஸ்கர் டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதி உள்ளார்.. அந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

    மருத்துவ ஊழியர்களுக்காக கைதட்டி ராயல் சல்யூட் !

    சாப்பிடுவது இல்லை.. தூங்குறது இல்லை.. 24 மணி நேரமும் மக்கள் பணி என்றே கிடக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.. ஏதாவது ஒரு ஆஸ்பத்திரிகளில் ஆய்வு, அறிவுரை, செய்தியாளர் சந்திப்பு, அதிகாரிகளுடன் ஆலோசனை என பம்பரமாக சுற்றி வருகிறார்.

    கிடைத்ததை சாப்பிடுகிறார்.. நேரம் இருந்தால் தூங்குகிறார்.. மிகப்பெரிய பொறுப்பில் அமைச்சர் இன்று நின்றுகொண்டுள்ளார்.. 9 பேர் உயிரிழந்த நிலையில் சற்று கடுமை தென்படுகிறது.. கண்டிப்பு காட்டுகிறார்.. இந்த கண்டிப்பு மேலும் கூட்டினால் நம் மக்களுக்கு அவ்வளவும் நல்லதுதான்.

    கடமைகள்

    கடமைகள்

    தமிழகத்தில் வைரஸ் குறித்த நடவடிக்கைகள உடனுக்குடன் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு வருகிறார். மருத்துவர்கள் பணியில் இருப்பது குறித்து, கடமைகள் குறித்து அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறார்.. இந்நிலையில் திடீரென டாக்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் விஜயபாஸ்கர்.. அதில் மனசார நன்றிகளை தெரிவித்துள்ளார்.. அந்த கடிதம் உணர்வுபூர்வமாக உள்ளது.

    நன்றி கடிதம்

    நன்றி கடிதம்

    ஏற்கனவே சுஜித் மறைவின்போது விஜயபாஸ்கர் எழுதிய கடிதம் அனைவரையும் கலங்க வைத்த நிலையில், இப்போது விஜயபாஸ்கரே கண்கலங்கி டாக்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதன் சுருக்கம் இதுதான்: "அழித்தொழிப்போம் உயிர்கொல்லியை.. "கொரோனா" உலகையே நடுங்க வைக்கும் ஒற்றை சொல்.. உலகமே பதறி கிடக்கிறது.. கண்ணுக்கு தெரியாத இந்த உயிர்க்கொல்லியின் வேகத்துக்கு எதிராக துணிந்து நிற்பது மட்டுமல்ல, ஒவ்வொருவரும் இடைவெளிவிட்டு தூர நிற்பதே சால சிறந்தது.

    சிரமம் இருக்கா?

    சிரமம் இருக்கா?

    வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது காற்றுபுகாத கவச உடையும், முககவசமும் அணிந்த அவர்களிடம் கனிவுடன் கேட்டேன், உங்களுக்கு ஏதாவது சிரமமா இருக்கிறதா என்று? மருத்துவர் ஒருவர் சொன்னார்.. சேவை செய்வதே எங்கள் பணி.. மனமார செய்கிறோம்.. ஆனால் அதில் ஒரு சிரமம்.. கவச உடை அணிவதால் தாகத்திற்கு தண்ணீர் குடிக்கத்தான் முடியவில்லை என்று அவர் கூற "ஐ வாஸ் எமோஷனல்"

    கண்ணீர் நிறைந்தது

    கண்ணீர் நிறைந்தது

    என் கண்களில் கண்ணீர் நிறைந்தது.. மகத்தான மருத்துவ சேவை கண்டு மலைத்து போனேன்.. இதையெல்லாம் உணர்ந்து விழிப்புடன் இருக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறைகூவல் விடுக்கின்றேன்.. அசுரத்தனமான வேகத்தில் பணியாற்றினால் மட்டுமே ஒவ்வொரு உயிருக்கும் பாதுகாப்பு என்பதால், ஊன் உறக்கமின்றி.. காலம் நேரம் பாராது.. கனபொழுது ஓயாமல், சுற்றுச்சுழன்று மகத்தான சேவை செய்கிறது நம் தமிழக அரசு.

    வைரல் கடிதம்

    வைரல் கடிதம்

    மெச்சுகிறேன் நம் மருத்துவ துறையை.. நெஞ்சார நெகிழ்ந்து பாராட்டுகிறேன்.. நம் சேவைகளால் வெல்லட்டும் மனிதம், வீழட்டும் உயிர்கொல்லி.. தொடர் பணியில் டாக்டர் சி.விஜயபாஸ்கர்" என்று கண்ணீர் நெகிழ வைக்கும் மாதிரி கடிதம் எழுதியுள்ளார். இந்த கவிதை வடிவ கடிதத்தை இணையத்தில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+