"நான் டாக்டர் விஜயபாஸ்கர் பேசறேன்.. ஃப்ரீயா இருங்க".. நான் நல்லா இருக்கேன்ய்யா.. உருக வைத்த அமைச்சர்
கொரோனா வார்டில் உள்ளவர்களிடம் நலம் விசாரித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை: "நான் டாக்டர் விஜயபாஸ்கர் பேசறேன்.. நல்லா இருக்கீங்களாம்மா.. ஃப்ரீயா இருங்க?' என்று அமைச்சர் கேட்க, நான் நல்லா இருக்கேன்ய்யா.. ஒன்னும் பிரச்சனை இல்லை" என்று கொரோனாவார்டில் உள்ள பெண் பதில் அளிக்கிறார்.. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனாவைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தமிழக அரசு வீரியத்துடன் செயல்பட்டு வருகிறது.. சுகாதாரதுறை முதல் அனைத்து மருத்துவ துறையினரும் பாடுபட்டு வருகின்றனர்..

அதேபோல, திமுகவும் தங்கள் பங்கினை சிறப்பாக செய்து வருகிறது. முக ஸ்டாலின், திமுக மாவட்ட செயலாளர்களுடன் வீடியோ கால் மூலம் உரையாடி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் படியும் கோரிக்கை விடுத்து வருகிறார்.
இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், கொரோனா வார்டுக்குள் யாராலும் எந்நேரமும் சென்றுவர அனுமதி இல்லை.. அதனால் பெரும்பாலும் வீடியோ கால் மூலம்தான் தலைவர்கள் கொரோனா வார்டுகளில் உள்ளவர்களிடம் பேசி வருகிறார்கள். அப்படித்தான் தமிழக அமைச்சர்கள் வீரமணி முதல் விஜயபாஸ்கர் வரை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் பேசி, தைரியம் தருகிறார்கள்.. ஊக்கமளிக்கிறார்கள். நம்பிக்கை ஊட்டுகிறார்கள்... இது வார்டில் 14 நாள் தனிமைபப்டுத்தப்பட்டவர்களுக்கு புது தெம்பை தந்து வருகிறது.
அப்படித்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிய வீடியோகால் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. கொரோனா வார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒரு பெண்மணியிடம் பேசும் வீடியோ அது.. "வணக்கம்மா.. நான் டாக்டர் விஜயபாஸ்கர் பேசறேன்.. நல்லா இருக்கீங்களாம்மா?' என்று கேட்க, நான் நல்லா இருக்கேன்ய்யா என்கிறார் அந்த பெண்.
எத்தனை நாள் ஆச்சு அம்மா வந்து? நல்லா சாப்பிட்டீங்களா? இன்னும் ஒருநாள்தான்மா.. இன்னைக்கும் டெஸ்ட் எடுத்துடுவாங்க.. எல்லாம் நல்லபடியா ரிசல்ட் வந்ததும் வீட்டுக்கு போயிடலாம்.. தைரியமா இருக்கணும், மன வலிமையா இருக்கணும், உங்கள மாதிரி எல்லாரும் நல்லா ஆயிட்டு இருக்காங்க.
டாக்டர்கள் உங்களை நல்லபடியா பார்த்துப்பாங்க.. முதலமைச்சர் வரைக்கும் சொல்லி இருக்காரு.. உங்களை எல்லாம் நல்லா பார்த்துக்க சொல்லி.. தைரியமா இருங்க.. ஃப்ரீயா இருங்க" என்கிறார். இப்படியே அந்த வார்டில் உள்ள அனைவரிடமும் வீடியோகால் மூலம் பேசுகிறார் விஜயபாஸ்கர்!!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications