ஒன்றல்ல.. 1440 வாய்ப்புகள் காத்திருக்கு.. அடிச்சு தூள் பண்ணுங்க!!
ஒரு நாளைக்கு 1440 நிமிடங்கள் இருக்கிறது. அதாவது உங்களுக்கு 1440 வாய்ப்புகள் இருக்கு. இதை விட வேறென்னங்க வேண்டும்.. ஒரு வாய்ப்பைத் தவற விட்டால்.. அடுத்த வாய்ப்பில் அடித்து நொறுக்குங்கள்.. நாம சாதகமாக நினைச்சா எல்லாமே சாதகமாகத்தான் முடியும்.
எல்லா வாய்ப்புகளும் நமக்குச் சாதகமாக அமையாது ஆனால் கிடைத்த வாய்ப்புகளை நமக்கு சாதகமாக்கிக் கொள்ள முயற்சி செய்யலாமே. முயற்சி திருவினையாக்கும். இன்றைக்கு கிடைத்த வாய்ப்பை நீங்கள் தவறவிட்டால் கவலைப்படாதீர்கள் நாளைக்கு உங்களுக்கு இதை விட பெரிய வாய்ப்பாகக் கிடைக்கப் போகிறது என்று நினையுங்கள்.

ஒவ்வொரு நிமிடமும் புதிய புதிய விஷயங்களை முயற்சி செய்யலாம். உங்களுக்கு எந்த துறையில் அதிக ஆர்வம் இருக்கிறதோ அதில் பல புதுமைகளைப் புகுத்தி வெற்றி அடையலாமே. வீட்டில் இருந்தபடியே தொழில் தொடங்கலாம். வாழ்க்கையில் மேன்மேலும் உயர வாய்ப்புகள் உங்கள் முன்னே கொட்டிக் கிடக்கிறது. அந்த வாய்ப்புகளை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோமோ அதைப் பொறுத்தே உங்கள் வெற்றி அமைகிறது.
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள். தோல்வி அடைந்தால் கவலைப்படாமல் வெற்றாயை நோக்கி முன்னேறுங்கள். எத்தனை சோதனைகள் வந்தாலும் உங்களால் மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கை வேண்டும் உங்களுக்கு. வாய்ப்புகள் இங்கே நிறைய இருக்கிறது.
உங்களுக்குப் பொருத்தமானதை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். சாதிக்கும் எண்ணம் உடையவர்களை அவர்களது இலக்குகளை அடையும் வரை யார் நினைத்தாலும் அவர்களைத் தடுக்க முடியாது.வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் உங்கள் வெற்றிக்காகப் பயன்படுத்துங்கள். வெற்றி நிச்சயம்.












Click it and Unblock the Notifications