சிறுசோ பெருசோ.. வெற்றி எதுவா இருந்தால் என்ன.. கொண்டாடுங்கள்

Subscribe to Oneindia Tamil

சிலருக்கு கடுமையான முயற்சிக்குப் பின்னர் சின்னதாக ஒரு வெற்றி கிடைக்கும். ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இது என்ன ஈசியாவா வந்துச்சு.. கஷ்டப்பட்ட பிறகுதானே வந்தது. அதில் என்ன பெருமை என்று நினைப்பார்கள்

அது தவறுங்க.. உண்மையில் வெற்றி சிறிதோ பெரிதோ.. அது வெற்றி.. அந்த வகையில் அது அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கான படிக்கட்டு.. எனவே அதை மறக்காமல் கொண்டாடுங்கள்.. அந்தக் கொண்டாட்டம் உங்களுக்கு உற்சாகம் தரும், அடுத்து பெரிய வெற்றிக்கு கை கொடுக்கும்.

hard work pays big victories

வெற்றி நிச்சயம் இது வேதசத்தியம் என்பது போல் கிடைக்கும் வெற்றியை உற்சாகத்தோடு கொண்டாட வேண்டும். ஒரு மாணவன் வகுப்பில் நடத்திய ஓவிய போட்டியில் பங்கேற்கிறான் என்றால் அவனைப் பாராட்டுங்கள். அவன் பரிசு பெறவில்லையென்றாலும் பரவாயில்லை. நீங்கள் அவனைக் கொண்டாடும் விதமே பரிசு பெற ஊன்றுகோலாக இருக்கும்.

ஒருவர் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதினார். அதில் வெற்றியும் பெற்று அவருக்கு பதிவாளராக வேலை கிடைத்தது. ஆனால் அவர் முகத்தில் மகிழ்ச்சியே இல்லை. ஏன் என்று விசாரித்தபோது அவர் குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வை எழுதியதாகவும் கலெக்டராக வேண்டும் என்பதே தம் விருப்பம் எனவும் ஆனால் அந்த தேர்வில் நான் தேர்வாகவில்லை இந்த வேலை தான் கிடைத்தது என்று சலித்துக் கொண்டார்.

இந்த வேலையும் கஷ்டப்பட்டதால் கிடைத்த வெற்றி தானே அதை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள் அதுவே உங்களை அடுத்தகட்ட வெற்றிக்கு இட்டுச் செல்லும். சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். சின்ன குழந்தை பள்ளியில் வெற்றிப் பெற்றால் அவ்வெற்றியைக் கொண்டாடுங்கள். அதுவே உங்கள் குழந்தையின் எதிர்கால வெற்றிக்கு வழிவகுக்கும்.

கிடைத்த வெற்றி சிறியதா பெரியதா என ஆராயாமல் கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் மனப்பக்குவம் வேண்டும் நம்மிடம். அப்பொழுதுதான் மேன்மேலும் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்.

வெற்றி எளிதில் கிட்டாது. அதனால் கிடைத்த வெற்றியைக் கொண்டாடுங்கள். பிறகு பாருங்கள் எப்பவுமே வெற்றி வெற்றி வெற்றி தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+