கொரோனா தொற்றுக்கு தொடக்கத்திலேயே சிகிச்சை எடுத்து கொண்டால் பிரச்சனை இல்லை- வென்றவரின் கதை இது!
சென்னை: கொரோனா தொற்றுக்கு தொடக்கத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை என்கிறார் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ரமேஷ்.
கொரோனாவில் இருந்து தாம் மீண்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் ஏ. ரமேஷ் பதிவு செய்துள்ளதாவது:

கடந்த 13 நாட்களுக்கு முன் தொடங்கியது தலைவலி, காய்ச்சல்..
ஆரம்பத்தில் லேசாக ஆரம்பித்த வலி, அடுத்தடுத்து கடுமையான வலியாக மாறவே அதிர்ச்சியடைவதை தவிர வேறு எதுவும் தோணவில்லை..
அப்போது காவல்துறை நண்பர் தனது தங்கையான, மருத்துவ கல்லூரி பேராசிரியரிடம் பேசி உடனடியாக சில மாத்திரைகளை பரிந்துரைக்க, அதை வாங்கி வருவதற்குள் வலி கடுமையாகவே, சிரமத்துடன் 25 கிலோ மீட்டர் பயணம் செய்து ரூமிற்கு சென்று மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு படுத்த போது அடுத்து என்ன என்ற கேள்விக்குறி கண் முன்னே வந்தது..
முதல் இரண்டு நாட்கள் இப்படியே செல்ல, அடுத்தடுத்து காய்ச்சல், தலைவலி, உடல்வலி என கொரோனாவிற்கான அறிகுறி தெரிய ஆடி போனது மனது.
என்ன செய்வது என்று தவித்த நிலையில்,முதல் நாள் செய்திக்கான தகவலை கொடுத்த டாக்டர். பகவதியை, தொடர்பு கொண்ட உடனே, புளியம்பட்டியில் உள்ள சித்த மருத்துவர் திருமதி.மீனா அவர்களுடன் கான்பிரன்ஸ் காலில் தொடர்பு கொள்ள வைத்தார்.
அவருடன் பேசிய போது உடனடியாக RT-PCR TEST எடுக்க அறிவுறுத்தினார். கோபியில் உள்ள அபி எஸ்கே மருத்துவமனை டாக்டர். திரு. குமரேசன் அவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்கலாம் என நினைக்கும் போதே, எப்போது அழைத்தாலும் பேசுபவர்,தற்போது உள்ள சூழ்நிலையில் பேசுவாரா என நினைத்துக்கொண்டே அவரை தொடர்பு கொண்ட போது, உடனே எனக்கு மதிப்பளித்து, எனது தகவல்களை பெற்றுக்கொண்டு, இது பாசிட்டிவ் சிம்ப்டம்ஸ் தான், இருப்பினும் டெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் காத்திருந்த போது அண்ணன் பாண்டிச்சேரி திரு.சந்திரன் ராஜா, அழைக்கவே, நிலையை கூறவும், உடனடியாக பாண்டிச்சேரி டாக்டர். திரு.அஸ்வின் அவர்களின் செல்போன் எண்ணை கொடுத்து உடனடியாக தொடர்பு கொள்ள அறிவுறுத்தினார்.
இருமுறை தொடர்பு கொண்ட போது எடுக்க முடியாத நிலையில் இருந்த டாக்டர்.அஸ்வின் சிறிது நேரத்தில் அவரே தொடர்பு கொண்டார்.
சில நிமிடங்கள் பொறுமையாக உடல் நிலை குறித்து விசாரித்த டாக்டர். அஸ்வின் பயப்பட தேவை இல்லை என்ற ஒற்றை வர்த்தையில் ஆரம்பித்தவர், அடுத்தடுத்து செய்ய வேண்டியவைகளை பொறுமையாக கூறினார்..
அதைத்தொடர்ந்து டாக்டர். பகவதி கூறிய புளியம்பட்டியில் உள்ள சித்தா மருத்துவர் டாக்டர். திருமதி.மீனா அவர்களின் வீட்டிற்கு சென்று சித்த மருந்துகளை வாங்கி வந்து அதை சாப்பிட ஆரம்பித்தேன்.
இதற்கிடையே எடுக்கப்பட்ட டெஸ்ட், எதிர்பார்த்த மாதிரியே பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தது.
அதைத்தொடர்ந்து மீண்டும் டாக்டர். அஸ்வினை தொடர்பு கொள்ள, எடுக்க வேண்டிய மாத்திரைகள், உணவு முறைகள் குறித்து பொறுமையாக விளக்கியவர், நள்தோறும் ஆக்சிஜன் அளவு, காய்ச்சல் குறித்த விபரங்களை வாட்ஸ்அப்பிற்கு அனுப்ப கூறினார்.
நகராட்சி அதிகாரிகள், நண்பர்கள் செல்வக்குமர், மஞ்சுநாதன் ஆகியோரிடம் முட்டை, முருங்கை கீரை தேவை என்றவுடன் உடனடியாக தேவைக்கு அதிகமாகவே கொண்டு வந்து தந்தனர்.
இதற்கிடையே கண் எரிச்சல் ஏற்படவே, இரவிலும் டாக்டர். அஸ்வினை தொடர்பு கொண்ட போது அதற்கான மருந்துகளை பரிந்துரைக்க, அதன் பின் கண் எரிச்சல் குறைந்தது.
கொரோனா ஒரு பெருந்தொற்று என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் உரிய நேரத்தில், ஆரம்ப காலத்திலேயே கவனித்து உரிய முறையில் சிகிச்சை எடுத்ததாலும், மன தைரியத்தினாலும் இன்று மீண்டு வந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சை பெற்றால் நிச்சயமாக குணமாக முடியும்.
இவ்வாறு கோபிசெட்டிபாளையம் ஏ. ரமேஷ் பதிவு செய்துள்ளார்.
இதேபோல் நீங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு வந்தவரா? உங்களின் கதையை [email protected] மெயில் ஐடிக்கு அனுப்புங்கள்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications