மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டுமா.. கையில் இதைப் பிடித்துக் கொள்ளுங்கள்

Subscribe to Oneindia Tamil

நிறையப் பேருக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இல்லை சப்பென்று இருக்கே என்று அவநம்பிக்கை இருக்கும். அதை விட்டு விடுங்கள். மாறாக நல்லதொரு லட்சியத்தை கையில் பிடியுங்கள்.. வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக மாறும்.

மனிதர்களை நம்பாதீர்கள். எந்த விஷயத்தையும் கூட நம்பாதீர்கள். ஆனால் உங்களது லட்சியத்தை நம்புங்கள்.. அதன் பின்னால் போங்கள்.. உங்கள் வாழ்க்கை உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

Be satisfied in your lifes every aspect.

லட்சியத்தை அடையும் போது நாம் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பார்கள். உயர்ந்த இலக்கை அடைய நினைக்க வேண்டும். நம்முடைய லட்சியங்களே நம் வாழ்வின் அந்தஸ்தை நிர்ணயிக்கிறது. அதனால் உங்கள் லட்சியத்தின் பின்னால் ஓடுங்கள்.

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள் என்பது போல் வாழ்க்கையில் எந்த ஒரு சூழலிலும் நாம் நம்முடைய லட்சியத்தைக் கைவிடக் கூடாது. கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொண்டால் அதன் மூலம் எக்காலத்திலும் வாழ்வில் வெற்றியடைய முடியும்.

நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது போல் நம் வாழ்க்கையில் லட்சியங்களை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வெற்றி இலக்கை எப்பாடுபட்டாவது அடைந்தே தீர வேண்டும் என்ற வைராக்கியம் வேண்டும். சாதிக்கத் துடிப்பவன் தான் வாழ்வில் வெற்றியடைகிறான். சிறுவயதிலேயே நான் டாக்டராவேன் இன்ஜினியராவேன் பத்திரிகையாளராவேன் ஓவியராவேன் இப்படி உங்களுடைய லட்சியங்களை நீங்களே வகுக்க வேண்டும். பின் உங்கள் லட்சியங்களை அடைய திட்டமிட்டு முயற்சி செய்ய வேண்டும்.

யாரையும் நம்பாதீர்கள் உங்களை நம்புங்கள் உங்கள் லட்சியங்களை அடைய முயற்சி செய்யுங்கள். மனிதன் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை என்பதை உலகுக்கு நிரூபியுங்கள். பிறரின் கருத்துக்களுக்குச் செவி சாய்க்காமல் லட்சியங்களை நோக்கிபா பயணியுங்கள். அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி ஈடு இணையில்லாதது. மகிழ்ச்சியாக வாழ வேண்டுமா லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் வசந்தம் வீசட்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+