கனவு காணுங்கள்.. ஆனால் அது மட்டும் போதுமா.. விரும்பி வெல்லுங்கள்

Subscribe to Oneindia Tamil

கனவு காணுங்கள்.. ஆனால் அது மட்டும் போதுமா.. நிச்சயம் போதாது.. மாறாக நாம் கனவு காணும் விஷயத்தை, இலக்கை விரும்ப வேண்டும், நேசிக்க வேண்டும். அதை நோக்கி வேகமாக பயணிக்க வேண்டும். அப்போதுதான் அது நம் வசப்படும்.

Recommended Video

    அரசு பள்ளியில் படித்த மாணவி சரண்யா.. ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்.. அமைச்சர், கலெக்டர் பாராட்டு

    மனிதனாகப் பிறந்த ஒவ்வொருக்கும் ஓர் கனவு உண்டு. நான் டாக்டராவேன் இன்ஜினியராவேன் எழுத்தாளராவேன் கலெக்டராவேன் இப்படி எத்தனை எத்தனையோ கனவுகள். கனவுகளை நனவாக்க நாம் அதை நோக்கி வேகமாகப் பயணிக்க வேண்டும். திட்டமிடுதல் செயலாற்றல் போன்றவையே கனவை அடைவதற்கான வழிகள்.

    let your dreams become true

    சிறுபிள்ளைகளிடம் அவர்கள் கனவு என்ன என்பதைப் பெற்றோர்கள் கேட்க வேண்டும். அவர்களுடைய கனவை நனவாக்க நாம் அவர்களுக்குத் துணையாக இருங்கள். தினமும் காலையில் என் இலக்கை அடைய நான் எத்தகைய முயற்சியும் எடுப்பேன் என்று உங்களுக்குள் சொல்லுங்கள்.

    தூங்கும் போது வருவது கனவல்ல, உங்களைத் தூங்க விடாமல் செய்வதே கனவு. உங்கள் லட்சியத்தை அடைய விடாமுயற்சியுடன் ஈடுபடுங்கள். அவ்வாறு செய்தால் வெற்றி நிச்சயம். சிலருக்கு வீடு வாங்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அதற்கு நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வர வேண்டும்.

    மதுரையில் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பூரணசுந்தரி அவர்களுக்குச் சிறுவயதிலேயே ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவு. அயராது உழைத்து நான்கு முறை தோற்றாலும் தன் விடாமுயற்சியால் தன் கனவை நனவாக்கி வெற்றி வாகை சூடியுள்ளார். அவரைப் போல நாமும் நம்முடைய இலக்கை அடையும் வரை போராட வேண்டும்.

    கனவு காண்பது தவறல்ல ஆனால் இறுதிவரை அதைக் கனவாகவே இருக்க விடக் கூடாது. நிறைய கனவு காணுங்கள். கனவுகளை நோக்கி வீறுநடைப் போடுங்கள். விடாமுயற்சியுடன் கனவுகளை நனவாக்கப் போராடுங்கள். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி. வாழ்க்கையில் வெற்றிக்கனியைப் பறியுங்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+