வாழ்க்கை அதன் போக்கில் போய்க் கொண்டிருக்கிறது.. நாமும் போவோம்!

Subscribe to Oneindia Tamil

ராபர்ட் பிராஸ்ட் என்று ஒரு பேரறிஞர் இருந்தார். அவரிடம் ஒருமுறை அவரது நண்பர், வாழ்க்கை எப்படி போகுதுன்னு கேட்டுள்ளார். அதற்கு பிராஸ்ட், நான் அதை 3 வார்த்தைகளில் சொல்ல முடியும் என்றார்.. அது என்ன 3 வார்த்தை என்றார் நண்பர்.. அதற்கு பிராஸ்ட், அதன் போக்கில் போய்க் கொண்டிருக்கிறது என்றார்.

இது எத்தனை உண்மை பாருங்கள்.. வாழ்க்கையை நாம் அதன் போக்கில்தான் போய் வாழ வேண்டும்.. அதேசமயம், அந்த வாழ்க்கையை செம்மையாக வாழும் திறமையையும் நாம் கைக்கொள்ள வேண்டும்.

We should live our life with its flow.

உன் வாழ்க்கை உன்கையில் என்பார்கள். உங்களுடைய வாழ்க்கையை நீ்ங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். வாழ்வை சரியான பாதையில் இட்டுச் செல்ல நீங்கள் தான் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் நினைத்தால் உங்கள் வாழ்வை அழகாக மாற்ற முடியும். ஒவ்வொரு தருணங்களையும் அனுபவித்து வாழுங்கள். நீங்கள் மகிழ்வதோடு அல்லாமல் மற்றவரையும் மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

உங்களுக்கான பாதையை வகுத்து அதன் வழியில் செல்லுங்கள். உங்கள் இலக்கை நோக்கிப் பயணியுங்கள். யு. பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும் என விரும்பினார் அப்துல் கலாம். ஆனால் அவர் அதில் தேர்ச்சிப் பெறவில்லை. இஸ்ரோவில் சேர்ந்து விஞ்ஞானியானார். உலகம் போற்றும் தலைசிறந்த விஞ்ஞானியாகத் திகழ்ந்தார்.

புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பி அவர்களின் தந்தை பொறியாளனாக வேண்டும் என விரும்பினார். ஆனால் எஸ்.பி.பி அவர்களுக்கோ பாடகராக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இறுதியில் வாழ்க்கைப் பாதையில் அவரது ஆசையே வென்றது. கல்லூரிகளில் இசைப் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றார். பிறகு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் தமிழில் முதன்முதலாக சாந்தி நிலையம் படத்தில் இயற்கையென்னும் இளைய கன்னி என்ற பாடலைப் பாடினார். எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப்பெண் படத்தில் இவர் பாடிய ஆயிரம் நிலவே வா பாடலின் மூலம் தமிழில் கால் பதித்தார். ஆறு தேசிய விருதுகள் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.

நமக்கான வாழ்க்கையை நாம் தான் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் வாழ்க்கையை அழகானதாக மாற்றும் சக்தி உங்களிடம் உள்ளது. வாழ்க்கை ஏதோ போகிறது என்று கூறாமல் வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் ரசித்து அனுபவியுங்கள். வாழ்க்கையின் பாதையில் நாமும் போவோம். மகிழ்ச்சியாக இருப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+