இதயத்தின் ஈர்ப்பு விசைதான் காதல்!

Subscribe to Oneindia Tamil

புவியின் ஈர்ப்பு விசையால்தான் நாம் மிதக்காமல் நடக்கிறோம்.. அதுவே இதயங்களுக்கு ஈர்ப்பு விசை கிடைத்து விட்டால் என்னாகும்.. காதலில் மிதப்போம்!

இதயத்தின் ஈர்ப்பு தான் காதல். இரு மனம் இணைவதே காதல். உள்ளங்கள் மட்டுமல்ல எண்ணங்களையும் பரிமாறிக் கொள்வதே காதல். கண்களால் பார்க்கும் போது ஒருவரின் மீது ஈர்ப்பு வருவது காதல் அல்ல. இருவர் இதயத்திலும் ஈர்ப்பு வருவது தான் காதல். கால மாற்றத்தில் எத்தனை விஷயங்கள் மாறினாலும் காதல் என்றும் மாறாது.

Love is the feelings of hearts

முதல் காதல் என்பது எல்லோருக்கும் ஸ்பெஷல். காதல் என்றால் என்ன என்று படித்தோ கேட்டோ தெரிந்துக் கொள்வதை விட அதை அனுபவிப்பது இன்னும் சுகமானது. இதயத்தின் ஓசை தான் காதல். இரு உள்ளங்களும் ஒன்றோடு ஒன்று உறவாடி காதல் என்னும் அன்பில் நனையும் போது அந்த சந்தோசத்திற்கு ஈடு இணையே கிடையாது.

இதயம் பேசும் போது இதழ்கள் பேச எதுவுமில்லை. அங்கே அமைதி மட்டுமே நிலவும். காதல் வயப்பட்டால் நிச்சயம் கனவுலகில் மிதக்க ஆரம்பித்து விடுவோம். நம் அன்றாடம் செய்யும் செயல்களைக் கூட மறந்து நம் துணையை நினைத்துக் கனவில் டூயட் பாட ஆரம்பித்து விடுவார்கள்.

கண்களால் பார்ப்பது மட்டும் காதல் அல்ல உள்ளங்கள் இடம்மாறுவது தான் காதல். தூய காதல் என்பது உள்ளத்தைப் பார்த்து வருவது தான் காதல். அது தான் நீடித்து நிலைக்கும். மற்றவையெல்லாம் கானல் நீரைப் போல. காதல் என்பது நம் நெஞ்சில் உள்ளது.

இரு மனமும் சேர்ந்து ஒரு மனமாவதே காதல். உள்ளம் உருக நம் துணையை நேசித்து அவர்களுக்காக விட்டுக் கொடுத்து வாழும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. இணைந்த இதயங்கள் பிணைப்பில் கொண்டாடுவதுதான் காதல்.. உண்மையான காதல் முகம் பார்த்து வராது.. மாறாக இதயம் பார்த்துதான் வரும்.

இணையுங்கள் இதயங்களால் கொண்டாடுங்கள் உங்கள் காதலை. இரு இதயங்கள் ஓர் இதயமாய் மாறட்டும்.. ஓரிதயமாக மாறி ஒருவருக்காக மற்றொருவர் சுவாசிக்கட்டும்.. காதலைக் கொண்டாடுவோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+