முதலில் உன்னைக் காதலி!
காதலில் விழுவதற்கு முன்பு நாம் நம்மையே முதலில் காதலிக்க வேண்டும்.. நம்மை விட நம்மை சிறந்த முறையில் காதலிக்க யார் இருக்காங்க சொல்லுங்க.
காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை என்று நினைக்காமல் உங்களை நீங்கள் காதலியுங்கள். உங்களின் ஒவ்வொரு செயலையும் ரசித்து செய்யுங்கள். நம்மை நாமே நேசிக்காவிட்டால் வேறு யார் நேசிப்பார்கள். நான் இந்த உடையில் மிகவும் அழகாக இருக்கிறேன். நான் இன்று இந்த செயலைச் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறேன் என்று உங்கள் மீது காதல் கொள்ளுங்கள்.

காதல் என்பது நம் நெஞ்சில் உள்ளது. பெற்றோரையும் மற்றோரையும் தான் காதலிக்க வேண்டும் என்பதில்லை. நம்மையே நாம் காதலிக்கலாம். நம் வாழ்க்கையின் அழகான தருணங்களை நீங்கள் நினைத்தால் மேலும் அழகாக்கலாம்.
காதலிக்க வேண்டும் உங்கள் குணங்களை காதலிக்க வேண்டும் உங்களின் திறமைகளைக காதலியுங்கள். உங்களை நீங்களே விரும்பும் போது உங்களின் தன்னம்பிக்கை மேலும் அதிகமாகும். நம்மை நாம் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் உங்களை நீங்கள் முதலில் காதலிக்க வேண்டும். தினம் தினம் மனதில் சந்தோசத்துடனும் முகத்தில் புன்னகையுடனும் உலா வர வேண்டும்.
நானே சிறந்தவன் நான் என் செயல்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பேன் என்னால் எதையும் செய்ய முடியும் என்ற மனோபாவம் மிக முக்கியம். உங்களுக்குப் பிடித்த உடை உடுத்தி உங்களின் அழகை ரசியுங்கள். நீங்கள் செய்த சிறப்பான செயலுக்கு உங்களை நீங்களே தட்டிக் கொடுங்கள். நீங்கள் செய்த விஷயத்துக்கு நீங்களே ஒரு சபாஷ் போடுங்கள்.
நம்மை நாமே காதலிப்பது என்பதை நம்மை நாமே மோட்டிவெட் செய்வதற்குச் சமம். நமது செயல்களை முதலில் நாம் பாராடட் வேண்டும். அப்போதுதான் பிறர் பாராட்டும்படி நாம் செயல்பட உத்வேகம் கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். அதை அவர்கள் முதலில்மதிக்க வேண்டும். அப்போதுதான் அதன் அவுட்புட் பிரமிக்கும் வகையில் வெளிப்பட்டு நமக்கு சிறப்பு சேர்க்கும்.
காதல் இல்லாத வாழ்க்கை இல்லை. முதலில் உங்களை நேசியுங்கள். உங்களை நீங்கள் காதலிக்கும் போது நீங்கள் உங்களைப் பற்றி அறியாத பல விஷயங்களை அறிந்துக்கொள்வீர்கள். உங்கள் மீது தீராக் காதல் கொள்ளுங்கள். வாழ்க்கை வசந்தமாகட்டும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications