Monday Motivation: உங்களைச் சுற்றி பாசிட்டிவ் எனர்ஜி!
உன் நண்பர்களைச் சொல் உன்னைப் பற்றி நான் சொல்கிறேன் என்று சொல்வார்கள். அது 200 சதவீதம் உண்மைங்க.. நம்மைச் சுற்றி யார் இருக்கிறார்களோ அவர்களின் தாக்கம்தான் நமக்குள்ளும் இருக்கும்.
எப்பவுமே நம்மைச் சுத்தி மோட்டிவேட் பண்ணக் கூடியவர்கள்தான் இருக்க வேண்டும். நம்மைத் தட்டிக் கொடுக்க வேண்டும். கை கொடுக்க வேண்டும்.
தடுமாறினாலும் கை பிடித்துத் தூக்கி விட வேண்டும். நம்மை சிந்திக்க வைக்க வேண்டும். நாம் சிந்திக்கத் தவறும்போது அதைத் தூண்டி விட வேண்டும்.. மொத்தத்தில் நமது இன்னொரு பிம்பமாக நமது நட்பு வட்டாரம் இருக்க வேண்டும்.. அதுதான் நம்மை செழுமையாக வைத்திருக்க உதவும்.

நம்மைத் தூண்ட வேண்டும்
உன்னால் முடியும் என்று நம்மைத் தூண்டிக் கொண்டே இருக்கும் மனிதர்கள் தேவை. அப்படிப்பட்ட நண்பர்கள் கிடைத்தால் எதிலும் வெற்றி தான். நம்முடைய நண்பர்கள் நமக்கு உத்வேகம் தருபவர்களாக இருக்க வேண்டும். நீயா இதைச் செய்யப் போகிறாய் உனக்கெல்லாம் இது சரியாக வராது என்று கூறும் நண்பர்களைத் தள்ளி வையுங்கள்.

கூடவே இருக்க வேண்டும்
மாறாக உன்னைத் தவிர யாரால் இது முடியும்.. உன்னால் மட்டுமே இது சாத்தியம்.. உன்னால் மட்டுமே முடியும்.. நீ அதை செய்யும்போது அது வேறு லெவலில் இருக்கும்,. தைரியமாக இறங்கிப் பார்.. முடியும்.. உன்னால் முடியும் என்று தட்டிக் கொடுத்து களத்தில் இறங்கி கூடவே இருந்து உணர்வுப்பூர்வமாக உற்சாகம் தருகிறார்களே.. அதுதான் பாசிட்டிவான நண்பர்கள்.

நல்ல நட்பு அவசியம்
நம் சிந்தனையைத் தூண்டும் வகையில் நண்பர்கள் இருக்க வேண்டும். தட்டிக் கொடுக்கும் நண்பன் கிடைத்தால் இவ்வுலகையே ஆளலாம். புதுப்புது விஷயங்களை நம் நண்பர்களிடம் பேசி தெரிந்துக் கொள்ள வேண்டும். அரசாங்க வேலை தேடுபவராக இருந்தால் உங்களைச் சுற்றியிருக்கும் நட்புகள் உங்களுக்கு எனர்ஜி டானிக்காக இருக்க வேண்டும்.

கூடவே பாசிட்டிவிட்டி
எனக்கு தமிழில் கதை எழுதப் பிடிக்கும். என் நண்பரின் ஊக்கத்தினால் இன்று எழுதும் அளவிற்கு உயர்ந்துள்ளேன். அப்படி இருக்க வேண்டும் நட்பு வட்டம். எப்பொழுதும் நம்மைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள அதே போல் இருக்கும் நண்பர்கள் தேவை. தோழர்கள் நம் முயற்சிக்குத் தோள் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.
எரிவிளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் என்பார்கள். அந்த தூண்டுகோல் நம் நண்பர்களையே சாரும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications