Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Monday Motivation: சக்தி வாய்ந்த 2 போர் வீரர்கள் யார் தெரியுமா...?

Subscribe to Oneindia Tamil

2 சக்தி வாய்ந்த போர் வீரர்கள் யார் தெரியுமா.. காலமும், பொறுமையும்.. இதைச் சொன்னவர் லியோ டால்ஸ்டாய். உண்மைதாங்க.. எத்தனை ஆழமான உண்மை இது பாருங்க.

காலமும் நேரமும் கூடி வர வேண்டும். அதற்காக நாம் காத்திருக்கத்தான் வேண்டும். பொறுத்தார் பூமி ஆள்வார்னு சும்மாவா சொன்னாங்க.. பொறுமையுடன் இருப்பவனுக்கு எல்லாமே கூடி வரும். அதுவே அவசரப்படுபவனுக்கு எல்லாக் காரியமும் தவறாகவே முடியும்.. அதுதான் பதறிய காரியம் சிதறும்னு சொல்வது.

பொறுமை கடலினும் பெரிது என்பார்கள். பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் வாழ்வில் வெற்றியடைகிறார்கள். ஒருவனுக்கு எல்லாத் திறமைகளும் இருந்தும் பொறுமை இல்லாவிட்டால் அவனால் எக்காலத்திலும் வெற்றியடைய முடியாது.

பழம் எப்ப கிடைக்கும்

பழம் எப்ப கிடைக்கும்

விதைப் போட்டவுடன் பழம் கிடைத்துவிடுமா. விதை மரமாகி மரம் பூத்துக் குலுங்கிய பின்னரே பழம் கிடைக்கும். அது வரை நாம் பொறுமை காக்கத்தான் வேண்டும். தானத்தில் மனிதனுக்கு மிகவும் அவசியமானது நிதானம் தான். ஒரு இடத்திற்குக் கிளம்பும் போது கொஞ்சம் முன்னதாகக் கிளம்ப வேண்டும். அவசர கதியில் கிளம்பிச் சென்றால் ஆபத்தை நாமே உருவாக்குகிறோம் என்று அர்த்தம்.

பூமா தேவி போல இருங்க

பூமா தேவி போல இருங்க

பொறுமையில் பூமாதேவியைப் போல இருக்க வேண்டும் என்பார்கள். நாம் பூமியைக் காலால் மிதிக்கிறோம் பள்ளம் தோண்டுகிறோம் நாம் செய்யும் செயல்களையெல்லாம் பூமாதேவி பொறுத்துக் கொள்கிறாளே அவளைப் போல் நாமும் இருக்க வேண்டும். ஒரு குழந்தை விளையாட்டுப் பொம்மையை உடைத்து விட்டது என்றால் அக்குழந்தையிடம் பொறுமையுடன் அதன் தவறைச் சுட்டிக்காட்டுங்கள்.

பொறுமையா இருப்பது அவசியம்

பொறுமையா இருப்பது அவசியம்

வாழ்க்கை பொறுமையுடையவனுக்கு அடிமை பொறுமை இல்லாதவன் அந்த வாழ்க்கைக்கு அடிமை என்பது போல் எப்போதும் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். உங்களுக்குக் கிடைக்க வேண்டியது நிச்சயம் கிடைத்தே தீரும். காலம் வரும் வரை காத்திருங்கள். பொறுமை இருக்கும் இடத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

இணைந்திருங்கள்

இணைந்திருங்கள்

ரத்தமும் சதையுமாக இணைந்திருக்க வேண்டிய தம்பதியினர் பலர் இன்று விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் காத்துக் கிடக்கின்றனர். திருமணம் ஆனவுடன் இருவரும் உடனுக்குடன் மற்றவரைப் புரிந்துக் கொள்ள முடியாது. ஒருவரையொருவர் புரிந்துக் கொள்ள சிலகாலம் தேவைப்படும் அதுவரைப் பொறுக்காமல் விவாகரத்து செய்கிறேன் என்று கிளம்பிவிடுகின்றனர்.

காத்திருப்போம்

காத்திருப்போம்

நீதிமன்றத்தில் விவாகரத்து கிடைப்பதற்காகக் காத்திருப்பவர்களுக்கு ஏனோ இருவருக்குள்ளும் ஒரு புரிதல் வரும் வரை காத்திருக்க முடியவில்லை. பொறுமை எல்லாவற்றிற்கும் அவசியம். பிறந்தவுடன் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்ப முடியாது. அதற்கான காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும். அதனால் ஒவ்வொரு மனிதனுக்கும் பொறுமை மிகவும் அவசியம்.காலம் வரும் காத்திருப்போம் வாழ்வில் வெற்றியடைவோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+