பெரிதாக கனவு காணுங்கள்!

Subscribe to Oneindia Tamil

பெரிதாக கனவு காண வேண்டும். நம் இலக்குகளும், நோக்கங்களும் கூட எப்போதும் பெரிதாகவே இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளையும் நாம் பெரிதாகவே செய்ய வேண்டும். அப்போதுதான் அதன் பலன்களும் பிரமாண்டமானதாக இருக்கும். சிலருக்கு எதையும் சுருங்கச் செய்து பழக்கப்பட்டிருப்பர். அப்படிப்பட்டவர்களால் பெரிய கனவுகளை துரத்த முடியாது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது போல எல்லா உயிர்களுக்கும் கனவுகள் இருக்கும் காணும் கனவுகளைக் கொஞ்சம் பெரிதாகத் தான் காண்போமே உதாரணமாக எனக்கு போலீசாக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். கனவு காணும் போதே நான் காலல்துறையில் உயரிய பதவியில் அமர வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.

motivation dream big always

இலக்குகளை எப்போதும் பெரிதாக இருக்கட்டும். மலையளவு நினைத்தால் தான் கடுகளவேனும் சாதிக்க முடியும். அதனால் எப்பொழுதும் கனவுகள் பெரிதாக இருக்கட்டும். வண்ணங்கள் பலவகை அதுபோலத்தான் கனவுகளும் நான் கலெக்டராவேன் நாட்டின் குடியரசுத் தலைவராவேன் பிரதமராவேன் என்ற உயரிய கனவு வேண்டும்.

நம் கனவை நோக்கிப பயணிக்க திட்டமிடல் செய்யும். விடாமுயற்சியும் சரியான திட்டமிடலுமே நிலையான வெற்றிக்கு வழிவகுக்கும். நம்முடைய நோக்கங்கள் எப்பொழுதும் பெரிதாக இருக்க வேண்டும். ஆயிரம் பேருக்கு நம்மால் முயன்ற உதவிகளை நாம் செய்வோம் என்று நினைத்து அதற்கான முயற்சியில் ஈடுபடும் போது ஆரம்ப நிலையில் குறைந்தது பத்து பேருக்காவது உதவ முடியும்.

வாழ்க்கைப்பாதையை நிர்ணயிப்பவை நம் கனவுகளே கனவு காண்பதை பெரிதாகக் காண்போம். நாம் நினைத்தால் வானம் கூட தொட்டுவிடும் தூரம் தான். கனவு காணுங்கள் அதுவும் பெரியதாக.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+