உங்களின் உண்மையான சொத்து எது தெரியுமா?
உங்களிடமிருந்து பறிக்க முடியாதது எது தெரியுமா.. உங்களின் சொத்து எது தெரியுமா.. உங்கள் புன்னகையும், தன்னம்பிக்கையும்தான்.. இதை நிறையப் பேர் உணருவதில்லை.
உண்மையில் நம்முடைய மிகப் பெரிய பலமே இந்த புன்னகையும், உற்சாகமும், தன்னம்பிக்கையும்தான்.. இவை மட்டும் நம்மை விட்டு நீங்காமல் இருந்தால் போதும் எதையும் சாதிக்கலாம்.
என்னால் முடியும் என்னால் நிச்சயம் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று யோசிக்காமல் உங்களுக்கு எது நல்லது என்று நீங்கள் முடிவெடுங்கள். வாழ்வில் வசந்தம் வீச வேண்டுமென்றால் உற்சாகமும் மகிழ்ச்சியும் தேவை. முயன்றால் முடியாதது இவ்வுலகில் எதுவுமில்லை.

முகத்தில் தோன்றும் புன்னகை நம் மனதைரியத்தை மற்றவரிடம் வெளிச்சம் போட்டுக் காட்டும். மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் ஒரு செயலை செய்யும் போது நாம் முழுஈடுபாட்டுடன் செய்கிறோம். அதனால் எளிதில் வெற்றிக்கனியை உங்கள் வசமாக்கிக் கொள்ளலாம். சிறு புன்னகையும் உங்கள் வாழ்வை சில நேரங்களில் மகிழ்ச்சியாக மாற்றும்.
யானைக்கு பலம் தும்பிக்கையில் மனிதனுக்கு பலம் நம்பிக்கையில் என்பார்கள். நம்பிக்கை இல்லாத மனிதனால் எந்த காரியத்திலும் வெற்றி பெற முடியாது. முடியாது என்பது முட்டாளின் அகராதி. உங்கள் திறமைகளை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். முயன்றால் முடியாதது எதுவுமில்லை இந்த உலகில். வெற்றி வேண்டுமா போட்டுப் பாருங்க எதிர்நீச்சல்.
எப்பொழுதும் உற்சாகத்துடன் இருப்பவர்களால் ஒரு செயலை திறம்பட முடிக்க முடியும். வெற்றி இலக்கை விரைவில் அடைந்து விடுவர். எத்தனை முறை தோற்றாலும் தன்னம்பிக்கையோடும் முகத்தில் புன்னகையோடும் போராடும் மனிதனே இறுதியில் வெற்றி பெறுகிறான். அதனால் தோல்வியைக் கண்டு அஞ்சாமல் தன்னம்பிக்கையோடும் புன்னகையோடும் வெற்றியை நோக்கி அடி எடுத்து வையுங்கள். வெற்றி உங்கள் கையில்.
பணமோ அந்தஸ்தோ மனிதனின் சொத்து கிடையாது. பணம் போய்விட்டால் கூட பணத்தை சம்பாதித்து விடலாம் ஆனால் உங்கள் தன்னம்பிக்கையும் உற்சாகமும் மகிழ்ச்சியும் இல்லாவிட்டால் அதை எதைக் கொண்டும் திரும்பப் பெற முடியாது. தன்னம்பிக்கை தான் உங்களின் உண்மையான சொத்து என்று உணருங்கள். உங்கள் முகத்தில் தோன்றும் புன்னகையும் உற்சாகமும் உங்கள் தன்னம்பிக்கையை பிரதிபலிக்கிறது. எனவே மகிழ்ச்சியாக இருங்கள் புன்சிரிப்போடு இருங்கள் அதுதாங்க உண்மையான சொத்து.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications