ஐ லவ்யூ சொல்லுங்கள்.. அன்பால் வெல்லுங்கள்!
உலகத்திலேயே மிகவும் அழகான வார்த்தை அன்புதான்.. காதலாக இருந்தாலும் சரி.. நட்பாக இருந்தாலும் சரி.. அல்லது வேறு எந்த உறவாக இருந்தாலும் சரி.. அன்புதான் அடிப்படை. அந்த அன்பும், புரிதலும் இல்லாமல் எந்த உறவும் அஸ்திவாரம் சரியாக இடப்படாததே.
ஐ லவ்யூ சொல்லுங்கள்.. காதலர்களுக்கு மட்டும்தான் இது உரித்தானதா.. நிச்சயம் இல்லை.. எல்லோருக்கும் லவ் உண்டு.. எல்லோருக்குள்ளும் அன்பு உண்டு.. அன்பால் வெல்லலாம் எதையும்.
நீங்கள் உங்கள் துணையோடு இருக்கும் நேரங்களில் ஐ லவ் யூ சொல்லுங்கள். இது உங்கள் உறவை இன்னும் பலப்படுத்தும். ஆழமான முத்தங்களோடு உங்கள் துணையிடம் ஐ லவ் யூ சொல்லும் போது உங்களுக்குள்ளே இருக்கும் அன்பு வெளிப்படுகிறது.

எப்போதும் அன்பு
காலை முதல் இரவு வரை பரபரப்பானச் சூழலில் ஓடிக்கொண்டிருக்கும் நீங்கள் உங்கள் துணைக்காகவும் நேரம் ஒதுக்குங்கள். மகிழ்ச்சியாக வாரத்திற்குக் குறைந்தது பத்து முறையாவது உங்கள் துணையிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள். ஐ லவ் யூ என்பதே ஒரு விதமான அன்பின் வெளிப்பாடு தான். உங்கள் துணைக்குக் காலையில் படுக்கையை விட்டு எழும்போதே ஐ லவ் யூ சொல்லுங்க. பிறகு பாருங்கள் நாள் முழுக்க புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள்.

மகிழ்ச்சி
உங்கள் மனைவி வீட்டில் இருப்பவரா அப்படியென்றால் நீங்கள் நிச்சயம் ஐ லவ் யூ சொல்ல வேண்டும். உங்களுக்குப் பிடித்த உணவைச் சமைத்துக் கொடுக்கும் துணைவிக்கு ஐ லவ் யூ சொல்லுங்க. அவர்களுடைய முக்கியமான நாட்களில் ஐ லவ் யூ சொல்லி மகிழ்ச்சிப் படுத்துங்கள். உங்கள் கணவர் அல்லது மனைவி அலுவலகத்தில் இருக்கும் போது ஐ லவ் யூ என்று குறுஞ்செய்தி அனுப்புங்கள்.

டென்ஷன் போய் விடும்
உங்கள் துணை அதைப் பார்த்தவுடன் டென்ஷன் எல்லாம் குறைந்து கூலாகி விடுவார். உங்கள் மனைவியை நீங்கள் பாராட்ட நினைத்தால் நிச்சயம் ஐ லவ் யூ சொல்லுங்க. நீங்கள் பதட்டமாக இருக்கும் போது உங்கள் இணை ஐ லவ் யூ சொன்னால் பதட்டமெல்லாம் போயே போச்சு. ஐ லவ் யூ சொல்லுங்க உங்கள் துணையிடம் உங்கள் இளமை ஊஞ்சலாடுவதை உணர்வீர்கள்.

வாழ்க்கை சந்தோஷம்
எந்த ஒரு விஷயமும் லவ்வோடு செய்துப் பாருங்கள் வாழ்க்கை சந்தோசமா இருக்கும். உங்கள் பிள்ளைகளுக்கு ஐ லவ் யூ சொல்லுங்க. அவர்களிடம் பேசும் நேரங்களில் ஐ லவ் யூ சொல்லுங்க இது அவர்களுடைய தன்னம்பிக்கையை வளர்க்கும். பிள்ளைகளும் உங்களுடையப் பெற்றோர்களுக்கு ஐ லவ் யூ மம்மி டாடி என்று சொல்லுங்கள். இது பெற்றோர் மற்றும் பிள்ளைகளிடம் நெருக்கத்தை அதிகப்படுத்தும்.

தாரக மந்திரம்
ஐ லவ் யூ என்பது வெறும் வார்த்தையல்ல அது உன்னை நான் காதலிக்கிறேன் என்று உங்கள் துணைக்கு ஒவ்வொரு நொடியும் உணர்த்துவதற்கான தாரக மந்திரம். கவலையோ சண்டையோ உங்கள் துணையிடம் ஐ லவ் யூ சொல்லுங்க சண்டை கோபம் எல்லாம் காணாமல் போய்விடும். அமெரிக்காவில் தம்பதியருக்கான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் பத்து தம்பதியர் கலந்துக் கொண்டனர். அதில் உங்கள் இணைக்கு நீங்கள் எத்தனை முறை ஒரு நாளைக்கு ஐ லவ் யூ சொல்வீர்கள் என்றனர். அதற்குப் பதில் ஒருவரிடமும் இல்லை.புன்சிரிப்புடன் ஐ லவ் யூ சொல்லுங்க வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications