அதுவும் காதல்.. இதுவும் காதல்!
வாழ்க்கையில் 2 விஷயங்களுக்காக நாம ஏங்குவோம்.. ஒன்று காதல் வயப்பட மாட்டோமா.. காதல் நமக்கு கை கூடாதா என்று ஏங்குவோம்.. இன்னொரு விஷயமும் உண்டு. அது என்ன தெரியுமா.. இந்தக் காதல் இப்படியே நீடிக்காதா.. என்பதுதான் அது.

காதலுக்கு மட்டும்தாங்க அந்த உயர்ந்த அந்தஸ்து உண்டு. வேறு எந்த அன்புக்கும் கூட இல்லாத பெருமையும், பெருமிதமும் காதலுக்கு மட்டுமே உண்டு. காதலித்துப் பாருங்கள் உங்களையே உங்களுக்குப் பிடிக்கும் என்பார்கள்.. அது உண்மைதான்.
காதலிப்பவர்களைப் பார்க்கும் போது நமக்கும் இப்படி ஒரு காதல் கிடைக்காதா என்று ஏங்கும் சிலர் காதலில் விழுந்தவுடன் அந்த காதலை தக்க வைத்துக் கொள்ள படாதபாடுபடுவார்கள். காதல் வயப்படும்போது தன் துணையை நினைத்து உருகுவார்கள்.
காதல் என்பது ஒரு சுகானுபவம். காதலிக்க ஆரம்பித்து விட்டால் நம் துணையின் நினைவைத் தவிர வேறெதும் இருக்காது. என் தேவதையை எப்போது பார்ப்பேன் என்று யோசிக்க ஆரம்பித்து விடுவீர்கள். விஷயம் இருக்கிறதோ இல்லையோ மணிக்கணக்கில் பேசுவார்கள். தம் துணைக்கு பிடித்த மாதிரி உடை அணிந்து அவர்களுக்குப் பிடித்த உணவை உண்பார்கள்.
காதல் இல்லாதவர்கள் நமக்கும் இப்படி ஒரு காதல் ஏற்படாதா என ஏங்குவார்கள். எனக்கு இவ்வாறு துணை இருந்தால் நன்றாக இருக்கும் என்றெண்ணி கற்பனையில் தன் துணையை எண்ணி இருப்பார்கள். கண்ணால் பார்க்கும் யாவும் காதலன் காதலியின் முகமே. எங்கு பார்த்தாலும் தன் துணை தன்னோடு இருப்பது போல் ஒரு உணர்வு.
கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு உள்ளம் பரிமாறிக் கொள்வதே காதல். காதலியின் தலைமுடி குஞ்சலம் பென்சில் பேனா இப்படி தன் துணையின் நினைவாக பல பொருள்கள் நம்மிடம் இருக்கும். இரவானாலும் பகலானாலும் எப்போதும் உன் நினைவு தான் உன்னோடு ஆயுள்வரை மகிழச்சியோடு வாழ வேண்டும் நீயில்லையேல் நானில்லை உன்னையே நினைத்திருக்கிறேன் ஜோடி சேர காத்திருக்கிறேன் என்று கவிதை எழுதாதவர்கள் கூட காதலில் விழுந்தவுடன் கவிதை எழுத ஆரம்பித்து விடுவார்கள்.
காதல் வயப்பட்டவர்கள் உங்கள் காதலை இறுதிவரைத் தொடர்வதற்குப் போராடுங்கள். காதல் இல்லாதவர்கள் இந்த காதலர் தினத்தில் உங்கள் துணையைத் தேர்ந்தெடுங்கள். இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் என்பது போல உங்கள் துணை உங்களுக்காகக் காத்திருக்கிறார். கண்டதும் காதல் பார்காமலே காதல் பேசாமலே காதல் சேராமல் காதல் ஆனால் எல்லாமே காதல் தான்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications