பேச வேண்டிய நேரத்தில் பேசுங்க!
எதையுமே தாமதிக்கக் கூடாது. சிலர் பேச வேண்டிய நேரத்தில் பேச மாட்டார்கள். ஆனால் பேச விரும்பும்போது அவர்களுக்கான காலத்தைத் தவற விட்டிருப்பார்கள்.
பேச வேண்டிய நேரத்தில் பேச வேண்டும். அமைதி காக்க வேண்டிய இடத்தில் அமைதி காக்க வேண்டும். பேச வேண்டிய நேரத்தில் பேசாமலிருப்பது பிரச்சினைக்கு வழிவகுக்கும். சிலர் பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் அந்த சந்தர்ப்பத்தைத் தவற விட்டுடேனே என்று பிறகு புலம்புவார்கள். கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன்.

ராமு நேர்காணலுக்குச் சென்றிருந்தான். எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று குழு விவாதத்திற்குத் தயாரானான். குழு விவாதத்தில் அவனுக்கான வாய்ப்புக் கிடைத்த போது அவன் பயத்தில் சரியாகப் பேசவில்லை. அதனால் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. இருபத்தைந்தாயிரம் ரூபாய் சம்பளம் கொண்ட வேலை அது. அவன் சரியாகப் பேசாததால் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. பேச வேண்டிய இடத்தில் உங்கள் கருத்துகளைத் தெரிவித்து விடுங்கள் மற்றுமொரு வாய்ப்பு கிட்டுமா என்பது நமக்குத் தெரியாது.
கிடைத்தற்கரிய வாய்ப்புகள் கூட நீங்கள் பேசாதிருப்பதால் கிடைக்காமல் போகலாம். தைரியமாகப் பேசுங்கள். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பேசி உங்கள் திறமைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துங்கள். பேசாமல் இருந்துவிட்டு இந்த பொன்னான வாய்ப்பைத் தவற விட்டுவிட்டோமே என்று பின்னர் வருந்தாதீர்கள்.
வாழ்க்கையில் ஜெயி்க்க வேண்டும் என்றால் நிச்சயம் பேச வேண்டும். பேச வாய்ப்புக் கிடைக்கும் போது அதை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பேச வேண்டிய நேரத்தில் கண்டிப்பா பேசுங்க வாழ்க்கை அழகாக இருக்கும்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications