லவ் பண்ணிட்டேன்.. யார்கூட இருந்தாலும் நல்லா இருக்கட்டும்.. அது ஒன்னு போதும்.. வைரலாகும் காதல் தோல்வி
இளம்பெண்ணின் தன்னம்பிக்கை பேச்சு வைரலாகிறது
சென்னை: காதல் இத்தனை வலிமை வாய்ந்ததா.. என்பதை ஒரு பெண் தன் வெகுளி பேச்சினால் புரிய வைத்துள்ளார்.. மனசை குத்தி கிழிக்கும் அந்த வீடியோதான் இணையவாசிகளை கட்டிப்போட்டு வைத்து வருகிறது!
Recommended Video
"காதல் தோல்வி ஆண் பெண் இருவருக்குமே ஒன்றுதான்...!ஆண்கள் மறைத்து வாழ்கிறார்கள்...!பெண்கள் மனதால் மரணித்து வாழ்கிறார்கள்..!" என்று எங்கோ படித்த ஞாபகம்.. இது 100 சதவீதம் உண்மை!
எத்தனையோ பேருக்கு காதல் வெற்றியாகவும், ஊக்கியாகவும் இருக்கிறது.. என்றாலும் ஒருசிலருக்கு தோல்வியில் முடிந்துவிடுகிறது.

இளம்பெண்
அந்த தோல்வியானது அவர்களை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தி கொண்டுபோகும்.. பெரும்பாலும் மனசில் சுமந்து கொண்டு வேறு பெண்ணுடன் திருமணத்துக்கு தயாராகிவிடுவார்கள். ஆனால், காதல் தனி விதம்.. புது விதம்.. அது மாசு மருவற்றது என்பதை இளம்பெண் ஒருவர் வெளிப்படுத்தி உள்ளார்.. இவர் யார் என்று தெரியவில்லை.. இது ஒரு டிக்டாக் வீடியோவா, அல்லது பேட்டியா என்றுகூட தெரியவில்லை.

ஏமாற்றம்
அதில் இந்த பெண், தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர், இன்னொரு பெண்ணுடன் சென்றுவிட்டது குறித்து பேசுகிறார். அவரை யாராவது ஒருத்தர் நல்லபடியா பார்த்து கொண்டால் அதுவே போதும் என தன்னை ஏமாற்றிய காதலரை விட்டுக்கொடுக்காமல் கூறியிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நல்லா இருக்கட்டும்
"இப்பதான் லவ் பண்ணி கல்யாணம் முடிச்சேன்... ஆனால் அவர் இன்னொருத்திகூட போயிட்டாரு. நான் லவ் பண்ணி சும்மா இப்படி நின்னுட்டு இருக்கேன்.. கல்யாணமும் முடிச்சி.. ஆனா வெளியில பார்த்தா தெரியாது, உள்ளுக்குள்ள நான் நிறைய கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்.. ஆனால் நான் இருக்கேனா இல்லையான்னு கூட கேட்கிறது இல்லை.. என்னை திடீர்னு வேண்டாம்னு சொல்லிட்டாரு... நல்லா இருந்தா சரிதான்.. நான் மனசார லவ் பண்ணிட்டேன்.. அவர் யார்கூட இருந்தாலும் நல்லா இருன்னு சொல்லிட்டு விலகிட்டேன்.. அது ஒன்னு போதும் எனக்கு.. அவரை நல்லா பார்த்துக்கிட்டா போதும் யாருன்னாலும்!!" என்கிறார்.

வீடியோ
இந்த பெண்ணின் பேச்சில் வெகுளித்தனம் நிறையவே வெளிப்படுகிறது.. சிரித்து கொண்டே தன் வலிகளை இப்படி பகிர்ந்து கொள்கிறார்.. அதுமட்டுமல்ல, தோல்வி, இழப்பைகூட பாசிட்டிவ்வாகவே எதிர்கொள்கிறார்.. இது மிகப்பெரிய முதிர்ச்சி பக்குவம்.. அதனால்தான் இந்த வீடியோவை நிறைய பேர் ஷேர் செய்துவருகிறார்கள்.

ஆதரவு
"போலீஸ் ஸ்டேஷன் போய் சட்டையை புடிச்சு, அவன அடிச்சி இழுத்துனு வர காலத்துல இப்படி ஒரு பெண், நீ கடவுள் மா.. ரொம்ப தைரியமான மனசு...கவலை படாதே அவன விட்டுட்டு அவ ஓடி போய்டுவா, சத்தியமா திரு(ம்பி ) ந்தி வ௫வான்.. கவலை வேண்டாம்" என்று இந்த பெண்ணுக்கு ஆதரவு கமெண்ட்களும் குவிந்து வருகிறது.
நமக்கும் ஒன்று சொல்ல தோன்றுகிறது.. "எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்னு சொல்ற மனசுதான் கடவுள்!!!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications