செயல்பாடுகளை விடுங்க.. முதலில் பார்வை ரொம்ப முக்கியம்
நிறையப் பேர் எப்படியாவது இதில் ஜெயிக்க வேண்டும்.. அதை எப்படி செய்வது என்று ஆக்ஷன் பிளான் குறித்துக் கவலைப்படுவார்கள்.. படபடப்பாக இருப்பார்கள்.
அது தேவையில்லங்க.. விஷன்தான் முக்கியம்.. நாம் பார்க்கும் பார்வையும், அதை அணுகுவதும்தான் வெற்றிக்கு வித்திடுமே தவிர பிளான் எல்லாம் போட்டு செய்தால் மட்டும் வந்து விடாது. திட்டமிடல் அவசியம்தான்.. ஆனால் அதை விட முக்கியம் நம்மிடம் உள்ள விஷன்.. அது சரியான கோணத்தில், இலக்கில் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் எதையும் எளிதாக திட்டமிட முடியும், செயலாற்ற முடியும்.

முடியாது என்பது முட்டாளின் அகராதி என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயங்களையும் நம்மால் எளிதாக அணுக முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். உங்கள் இலக்குகளை நிர்ணயித்து அந்த இலக்கை நான் எளிதாக அடைவேன் என்ற நம்பிக்கை வேண்டும்.
படிக்கும்போதும் எளிமையாகப் படிக்க வேண்டும். அதாவது அந்த படிப்பை நம் வாழ்வின் செயல்முறைகளில் ஒப்பிட்டுப் பார்த்து அதை எளிதாகப் படிக்கலாம். நீங்கள் உங்கள் குழந்தைக்குக் கூட்டல் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்றால் பருப்பு வகைகள் பொம்மைகளை வைத்து எளிய முறையில் கற்றுக் கொடுக்கலாம். இவ்வாறு கூறும்போது எக்காலத்திலும் கூட்டல் மறக்காது.
அந்தக் காலத்தில் பாட்டி தாத்தா வீட்டில இருந்தால் புராணக் கதைகளைக் கூறுவர். அதே கதைகளைப் புத்தகம் எடுத்துப் படிக்கும் போது அவ்வளவு சுவாரஸ்யம் இருக்காது. ஆனால் உங்களுக்கு வாழ்நாள் வரை அக்கதைகள் மறக்காது. அது போலத்தான் உங்கள் இலக்குகளை அடையும் போதும் நாம் இருக்க வேண்டும்.
இன்று அரசுப்பணிக்காகப் படித்து வரும் மாணாக்கர்களும் திட்டமிட்டுப் படிக்காமல் அப்பாடங்களைப் புரிந்து பல எடுத்துக்காட்டுகளுடன் படித்தால் எல்லாத் தேர்வுகளும் எளிது தான். எதிலும் வெற்றி தான். கல்வி கற்கும் மாணாக்கர்களும் அறிவியலை நம் அன்றாட வாழ்வியலோடு சேர்த்துப் படிக்க வேண்டும். அப்பொழுது தான் உங்கள் விஷனை அடைய முடியும்.
திட்டமிடலுக்கு முக்கியத்துவம் தராமல் உங்கள் விஷனுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். தடைகளைத் தகர்த்தெறிந்து விண்ணில் நட்சத்திரங்களாக ஜொலியுங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications