எங்கய்யா போச்சு அந்த பொங்கல் வாழ்த்தெல்லாம்!
அது ஒரு காலம்.. கனாக்காலம்.. பொங்கல் வாழ்த்துக்காக கடை கடையாக ஏறி இறங்கி போய் கார்டு வாங்கி அதை போஸ்ட் பண்ணிட்டு போச்சா இல்லையான்னு தெரியாமல் படபடத்துக் காத்திருப்போம்.
வந்து சேர்ந்தது என்று அங்கிருந்து தகவல் வரும்போது நமக்குக் கிடைக்கும் சந்தோஷம் இருக்கு பாருங்க.. அது தனி ரகம்தான்.
இப்போதெல்லாம் அது மலையேறிப் போச்சுங்க. எல்லாமே வாட்ஸ் ஆப்பிலேயே முடிந்து விடுகிறது.

வாட்ஸ் ஆப்பில் முடங்கிய உலகம்
கல்யாணத்தைக் கூட வாட்ஸ் ஆப்பில் கொண்டு வந்துடாட்டாங்க.. இதில் கார்டு வாங்க எங்கே நமக்கு நேரம் இருக்கு சொல்லுங்க. பொங்கல் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வாழ்த்து அட்டைகள் தான். அந்த வாழ்த்து அட்டைகளைச் சிலர் கடைகளில் வாங்கிப் பரிசளிப்பர்.

பானையில் வண்ணமிட்டு
சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவர்கள் பொங்கல் பானை வரைந்து அதில் வண்ணமிட்டுத் தன் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்புவர். அந்த அட்டையைப் பார்த்து இது மிகவும் அழகாக இருக்கிறது என்று யாராவது கூறினால் நாம் வானத்தில் மிதக்க ஆரம்பித்து விடுவோம்.

வாழ்த்தை அட்டைகள் இல்லை
இன்று தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியால் வாழ்த்து அட்டைகள் குறைந்து விட்டது. மின்ணணு வாழ்த்து அட்டைகள் பரிமாறப்பட்டாலும் வாழ்த்து அட்டைக்காக கால் கடுக்கத் தபால்காரரின் வருகைக்காகக் காத்திருக்கும் சுகமே தனி தான். நமக்குப் பிடித்தவருக்காக பார்த்துப் பார்த்து வாழ்த்து அட்டை தயார் செய்து அதைப் பரிசளிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது.

சூரியனை வரைவதா
சூரியன் வரைவதா கரும்பு வரைவதா பொங்கல் பானை மட்டும் போதுமா என்று என்ன வரைவது என்று பிள்ளைகளுக்கிடையே விவாதம் சுவாரஸ்யமாக நடக்கும். வாழ்த்து அட்டைகள் வந்ததும் உனக்கு எத்தனை அட்டை இருக்கிறது எனக்கு எத்தனை இருக்கிறது என்று குழந்தைகள் கணக்கிடும் போது அது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்தப் புத்தாண்டில் உங்களுக்குப் பிடித்தவருக்கு வாழ்த்து அட்டை அனுப்புங்கள்.

அன்பைப் பரிமாறிக் கொள்ள
நம்முடைய அன்பைப் பரிமாறிக் கொள்வதில் வாழ்த்து அட்டைகள் சிறந்த பங்கு வகிக்கிறது. எத்தனை விதமான வண்ணங்கள் நிறைந்த கண்கவர் வாழ்த்து அட்டைகள் உள்ளது. இப்பொழுதெல்லாம் வாழ்த்து அட்டை எங்கிருக்கிறது என்று தேடும் நிலையில் உள்ளோம். அதை விடுத்து வண்ணங்கள் நிறைந்த வாழ்த்து அட்டையோடு பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள். என்ன எல்லோரும் வாழ்த்து அட்டை அனுப்ப கிளம்பிட்டீங்களா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications