மகிழ்ச்சி எங்கிருக்கிறது?
மகிழ்ச்சி எங்கிருக்கிறது.. நிறைய பேருக்கு இதைக் கண்டுபிடிப்பதில் அத்தனை குழப்பம் வரும்.. ஆனால் உண்மையில் மகிழ்ச்சி எங்கிருக்கிறது தெரியுமா.. உங்களுக்குள்தான் இருக்கிறது.
உங்களது உள்ளத்தில் இருக்கிறது. .உங்களது செயல்பாடுகளில் இருக்கிறது.. உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் இருக்கிறது.. உங்களைச் சுற்றியுள்ள பாசிட்டிவ் எனர்ஜியில் இருக்கிறது. நீங்கள்தான் அதை உணர வேண்டும்.. நீங்கள்தான் அதை நுகர வேண்டும்.. நீங்கள்தான் அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.. உங்களை இயக்கும் சக்திதான் உங்களது மகிழ்ச்சி.. அந்த சக்தி உங்களை சந்தோஷப்படுத்தினால் அதுதான் உண்மையான மகிழ்ச்சி.

மகிழ்ச்சி தான் நம்முடைய பலம். அதைத் தேடி நாம் அலைய வேண்டாம் அது நம்முள்ளே தான் இருக்கிறது. அன்பான மனைவி ஆதரவான கணவன் முத்தான குழந்தைகள் நிறைந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. பிறரைப் பார்த்துப் பொறாமைப்படாமல் நமக்குக் கிடைத்ததை எண்ணி நாம் மகிழ வேண்டும்.
காலையில் எழுந்தவுடன் உங்களுக்குப் பிடித்த காபியோ தேநீரோ அருந்திக்கொண்டே இயற்கையை ரசியுங்கள். பிறகு யோகா மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் துணையிடம் அன்பு பாராட்டுங்கள். உங்கள் முகம் மலர்ச்சியோடு இருக்கட்டும். புன்சிரிப்புடன் அலுவலகத்திற்குச் செல்லுங்கள். உங்களைப் பார்க்கும் மற்றவர்களுக்கும் அந்த மகிழ்ச்சி கிடைக்கும்.
ஒரு மனிதனுக்கு உண்ண உணவும் இருக்க இடமும் உடுத்த உடையும் அவசியம். கிடைப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எப்பொழுதும் எதையும் நினைத்துக் கவலைப்படாதீர்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டியது நிச்சயம் உங்களைத்தேடி வந்து சேரும். உங்கள் பெற்றோரோடு நேரம் செலவிடுங்கள். பிள்ளைகளோடு விளையாடுங்கள். உங்கள் துணைக்கு வீட்டு வேலைகளில் உதவுங்கள். கவலைகளை மறந்து குடும்பத்தினருடன் ஒன்றாக உணவருந்துங்கள். பிள்ளைகளுடன் கலந்துரையாடுங்கள்.
வாழ்க்கை என்பது ஒரு முறை தான் அதை மகிழ்ச்சியாக வாழ்ந்து விட வேண்டும். எவ்வித சிரமமான சூழலிலும் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயலுங்கள். அப்போது தான் உங்கள் பகைவன் கூட உங்களை எதிர்க்க தயங்குவான். எப்பொழுதும் மனதில் மகிழ்ச்சியோடும் புன்சிரிப்போடும் இருங்கள். உங்களுடைய மகிழ்ச்சி உங்கள் வீட்டினரையும் சுற்றத்தாரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும். உங்கள் பாசிடிவ்வான நண்பர்களிடம் கலந்துரையாடுங்கள்.
மகிழ்ச்சி என்பது நம்மிடம் தான் உள்ளது. நாம் அதை உணர்ந்து பிறரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவேண்டும். டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி .
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications