2 வயது பெண் குழந்தைக்கு மிகப்பெரிய இதய நோய்.. உயிர் காக்க உங்கள் உதவி தேவை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தைக்கு, இதய சிகிச்சைக்காக நிதி உதவி தேவைப்படுகிறது.

எல்லப்பன் மற்றும் நீலா தம்பதிக்கு பிறந்த குழந்தை பெயர், மோனீஷா. பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிறந்த இந்த குழந்தைக்கு பிறந்த 45 நாட்களில், மிகவும் கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது. குழந்தைக்கு மூச்சு விடுவது மிகவும் கடினமாகிவிட்டது. எனவே உள்ளூர் மருத்துவரை எல்லப்பன் தம்பதி சென்று பார்த்தனர். அவர் அவர்களை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார்.

ஸ்டான்லி மருத்துவமனையில், சோதனை செய்து பார்த்தபோது, மோனீஷாவுக்கு, இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மோனீஷாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நான்கு மாதத்தில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் சிகிச்சையால், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

ஆனால், இப்போது மோனீஷாவுக்கு 2 வயதாகிறது. சமீபத்தில், ஸ்டான்லி மருத்துவமனையில் இருதயவியல் முகாம் நடத்தப்பட்டபோது, ​​​​மோனீஷாவுக்கு சோதனை நடந்துள்ளது. அப்போது, குழந்தையின் உடல்நலம் கவலைக்குரியதாக இருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Large fenestrated Ostium Secundum ASD, left to right Shunt, MVP with moderate MR போன்ற பிரச்சினைகள் குழந்தைக்கு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. ஏஎஸ்டி மூடுதல் மற்றும் எம்விபி, லேசான எம்.ஆர். ஆகிய சிகிச்சைகள் அந்த குழந்தைக்கு தேவைப்படுகிறது.

மருத்துவ செலவுக்கு சுமார், ரூ.2,60,000 தேவைப்படுகிறது. எனவே, உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+