வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
உ.பி.: பயணிகள், மாணவர்கள் வன்றை-2 ரயில்களுக்குத் தீ வைப்பு
வாரணாசி:
உத்தரப் பிரதேசத்தில் பயணிகளும், மாணவர்களும் வன்றையில் ஈடுபட்டு இரு ரயில்களுக்குத் தீ வைத்தனர்.
இது குறித்து தில்தாநிகர் போலீஸார் கூறியதாவது:
தில்தாநிகர் ரயில் நலையத்தில் அப்பர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பசோதகர்கள் திங்கள்கிழமை பசோதனை மேற்கொண்டனர். அப்போது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த சிலரை அவர்கள் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் டிக்கெட் பசோதகர்களிடம் ஒரு கும்பல் ரகளையில் ஈடுபட்டது.
இதையடுத்து, அங்கு வந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், ரகளையில் ஈடுபட்ட கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நிடத்தினர். இதில், தனது சகோதரருடன் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்த அருண்குமார் பாண்டே என்ற மாணவர் குண்டுக் காயம் பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ரயிலில் இருந்த பயணிகளும், மாணவர்களும் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசித் தாக்கினர். பிறகு, அப்பர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் தாடி காட்-தில்தார் நிகர் ரயில்களுக்குத் தீவைத்தனர். தாக்குதலில் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.
ரயில்களில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தில்தார் நிகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்னர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications