வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
"அமெரிக்கன் பியூட்டி படத்திற்கு 5 ஆஸ்கர் விருதுகள்
லாஸ் ஏஞ்சலஸ்:
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த 72-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் "அமெரிக்கன் பியூட்டி என்ற படம் 5 விருதுகளைத் தட்டிச் சென்றது. "தி மேட்ரிக்ஸ் படம் நான்கு விருதுகளை பெற்றது.
இந்தியர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மனோஜ் நைட் சியாமளனுக்கு விருது ஏதும் கிடைக்கவில்லை. இயக்கம் மற்றும் நேரடி திரைக்கதைக்காக சியாமளனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
வெடி ஜோக்குகள், திருடு போன ஆஸ்கர் சிலைகள் மீண்டு வந்த கதை என வித்தியாசமான சூழ்நிலையில் 72வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு துவங்கியது.
நகைச்சுவை நடிகர் பில்லி கிரிஸ்டல் நிகழ்ச்சியை ஏழாவது முறையாகத் தொகுத்து வழங்கினார்.
- சிறந்த நடிகராக கெவின் ஸ்பேசி தேர்ந்தெடுக்கப்பட்டார். "அமெரிக்கன் பியூட்டி என்ற படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்தது. இது இவருக்கு இரண்டாவது ஆஸ்கர் விருது.
- சிறந்த நடிகையாக "பாய்ஸ் டோன்ட் கிரை படத்தில் நடித்த ஹில்லாரி ஸ்வாங்க் தேர்வானார். இது இவருக்கு முதல் ஆஸ்கர் விருது.
- சிறந்த இயக்குநருக்கான விருதினை "அமெரிக்கன் பியூட்டி படத்தின் இயக்குநர் சாம் மெண்டஸ் பெற்றார்.
- சிறந்த படமாக "அமெரிக்கன் பியூட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது.
- "தி மேட்ரிக்ஸ் படம் 4 விருதுகளை பெற்றது. எடிட்டிங், விஷூவல் எஃபக்ட்ஸ், ஒலிப்பதிவு, ஒலிப்பதிவு எடிட்டிங் ஆகிய பிரிவுகளில் இப்படம் விருதுகளைப் பெற்றது.
- சிறந்த துணை நடிகராக மைக்கேல் கெயின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- "கேர்ள் இன்டர்ரப்டட் என்ற படத்தில் நடித்த ஏஞ்செலினா ஜோலி சிறந்த துணை நடிகையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விழாவில் வழங்கப்பட்ட முதல் விருது இதுதான். மன நிலை பாதிக்கப்பட்ட பெண்ணாக இந்தப் படத்தில் ஜோலி நடித்திருந்தார்.
- சிறந்த ஒரிஜினல் இசைக்கான விருது "தி ரெட் வயலின் படத்திற்குக் கிடைத்தது.
- சிறந்த வெளிநாட்டுப் படமாக "ஆல் அபவுட் மை மதர் என்ற படம் பெற்றது.
- சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது "டார்ஜான் படத்திற்குக் கிடைத்தது.
- சிறந்த பொழுதுபோக்கு டாகுமெண்டரியாக "ஒன் டே இன் செப்டம்பர் படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- குறுங்கதையாக எடுக்கப்பட்ட டாகுமெண்டரிப் பிவில் "கிங் ஜிம்ப் விருது பெற்றது.
- கார்ட்டூன் குறும்படப் பிரிவில் "தி ஓல்ட் மேன் அன்ட் சீ என்ற படம் விருது பெற்றது.
- குறும்படப் பிரிவில் "மை மதர் ட்ரீம்ஸ் தி சாத்தான்ஸ் டிசிப்பிள்ஸ் இன் நியூயார்க் என்ற படம் விருது பெற்றது.
- சிறந்த மேக்கப்பிற்கான விருதை "டாப்சி டர்வி படம் பெற்றது.
- சிறந்த உடையமைப்பிற்கான விருதும் "டாப்சி டர்வி படமே பெற்றது.
- சிறந்த ஆர்ட் இயக்கத்திற்கான விருது "ஸ்லீப்பி ஹாலோ படம் பெற்றது.
- சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது "அமெரிக்கன் பியூட்டி படத்திற்குக் கிடைத்தது.
- நேரடியாக எழுதப்பட்ட திரைக்கதைக்கான விருதும் "அமெரிக்கன் பியூட்டி படத்திற்கே கிடைத்தது.
- அடாப்டட் திரைக்கதைக்கான விருது "தி சைடர் ஹவுஸ் ரூல்ஸ் என்ற படத்திற்குச் சென்றது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications