வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆஸ்கர் விருது நிகழ்ச்சியைப் படம்பிடித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது: பெண் பைலட் உள்பட 2 பேர் காயம்
லாஸ் ஏஞ்சலீஸ்:
ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியைப் படமெடுத்துவிட்டு திரும்பிய ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பெண் விமானி, புகைப்படக்காரர் ஆகியோர் காயமடைந்தனர்.
ஃபாக்ஸ் டெலிவிஷன் நிறுவனம் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்தது. விருது வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு நடந்த நிகழ்ச்சியையும் ஒளிப்பதிவு செய்து விட்டு புகைப்படக்காரர் திரும்பினார். அப்போது ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அருகிலிருந்து ஒரு விமான நிலையத்தில் ஹெலிகாப்டரை விமானி இறக்கினார்.
28 வயதே ஆன அந்தப் பெண் விமானி ஹெலிகாப்டரில் ஏற்பட்ட திடீர் கோளாறால் விமானத்தை விபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக போராடினார். ஆனால் கடைசி சில நொடிகளில் ஹெலிகாப்டர் தானாகவே கீழே தரையிறங்கி அதில் இருந்த சில பாகங்கள் உடைந்து நொறுங்கியது. விழுந்த சில நொடிகளில் வெடித்தது. அங்கேயிருந்தவர்கள், விமானியையும், புகைப்படக்காரரையும் பத்திரமாக மீட்டனர்.
விமானி மற்றும் புகைப்படக்காரரின் பெயர்கள் பாதுகாப்பு கருதி வெளியிடப்படவில்லை. இருவருக்கும் கால் மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications