வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

தமிழக வணிகர் வாரியத்தில் 29,000 உறுப்பினர்கள்

சென்னை:

"தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் இதுவரை 29 ஆயிரத்து 712 பேர் ஆயுள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் கிராமங்களில் உள்ள வணிகர்களையும் உறுப்பினர்களாக சேர்க்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது" என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தில் இது குறித்து நடந்த வருமாறு :

ஏ.வி.ஏ.நாசர் (த.மா.தேசியலீக்):

தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக தகுதிகள் என்ன? இதுவரை எத்தனை உறுப்பினர்கள சேர்க்கப்பட்டுளள்ளனர்?.

முதல்வர் கருணாநிதி:

தமிழ்நாடு வணிகவரிச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற அனைத்து வணிகர்களும் உறுப்பினர் ஆகலாம். ஒரு நிறுவனத்தை, அதன் பெயரிலேயே உறுப்பினராக்க இயலாது, அதன் உரிமையாளரின் பெயரிலோ அல்லது பங்குதாரர்களின் பெயரிலோ தான் உறுப்பினராக்க முடியும்.

பங்குதாரர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக ரூ 150 செலுத்தி உறுப்பினராகலாம். ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனத்தின் பங்குதாரர் என்றால் ஏதாவது ஒரு நிறுவனத்தின் பெயரில் ரூ150 செலுத்தினால் போதுமானது. வியாபாரத்தை இடையில் கைவிட்டவர்கள் வாரியத்தினால் வழங்கப்படும் சலுகைகளை பெற தகுதியுடையவர்கள் அல்ல.

பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகிய சட்டங்களின் கீழ் பதிவு பெற்று தொழில் வரி செலுத்தும் வணிகர்கள், தொழில் வரி செலுத்திய ஓறாண்டிற்கு பிறகு உறுப்பினராகலாம்.

29.02.2000 வரை 29,712 பேர் ஆயுள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வாரிய உறுப்பினர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரகஅறுவை சிகிச்சைக்கு ரூ 25 ஆயீரம் நிதியுதவி தரப்படும். உறுப்பினர் இறந்தால் ரூ 50 ஆயிரம் குடும்பநல நிதி வழங்கப்படும்.

கிராமங்களில் உள்ள வணிகர்களையும் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேரும் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சமீபத்தில் நடந்த வணிகர் நல வாரியக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+