வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தமிழகத்தில் சத்துணவு ஊழியர்கள் அரசு ஊழியர்களாக ஆக்கப்படமாட்டார்கள் - முதல்வர் கருணாநிதி
சென்னை:
தமிழகத்தில் சத்துணவு ஊழியர்களாகப் பணியாற்றி வருபவர்கள் அரசு ஊழியர்களாக ஆக்கப்படமாட்டார்கள் என்று முதல்வர் மு. கருணாநிதி சட்டப்பேரவையில் புதன்கிழமை தெரிவித்தார்.
தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் புதன்கிழமை நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சோ. பாலகிருஷ்ணன், சத்துணவு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இத் தீர்மானத்துக்கு முதல்வர் மு. கருணாநிதி பதிலளித்தார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊதியம் அளித்து வருகிறது. இதனால், கூடுதல் நிதிச் சுமையில் தமிழக அரசு உள்ளது. இந் நிலையில், தங்களை அரசு ஊழியர்களாக ஆக்கவேண்டும் என்று சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முழு நேர ஊழியர்களாத இல்லாமல் பகுதி நேர ஊழியர்களாகப் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்களை எவ்வாறு அரசு ஊழியர்களாக ஆக்கமுடியும். ஆகவே அவர்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications